search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Producers Corporation"

    • பெண் விவசாயிகள் பயணடைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரத்தில் நபார்டு வங்கியின் உதவியுடன் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் மூலம் பீரிடம் பெண்கள் நடத்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டது.

    இந்த நிறுவனம் விவசாய பெண்களை மட்டும் இயக்குனர்களாகவும் மற்றும் உறுப்பினர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவன துவக்க விழாவிற்கு பிரீடம் பவுண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் செல்வராஜ், நபார்டு வங்கி பொது மேலாளர்.பிரவீன் பாபு, இந்தியன் வங்கி திருப்பத்தூர் முன்னோடி வங்கி மேலாளர் அருன் பாண்டியன், இந்தியன் வங்கி சுய வேளைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர். அரவிந்த், இந்தியன் வங்கி வெங்களாபுரம் கிளை மேலாளர் கணேஷ், இந்தியன் வங்கி நிதி சார் கல்வி ஒருங்கிணைப்பாளர். ஜோதி குத்துவிளக்கு ஏற்றி இந்த நிறுவனத்தை தொடங்கி வைத்தனர்.

    துவக்க விழாவில் 100-க்குப் அதிகமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியில்எழிலரசி முதன்மை அதிகாரி நன்றி கூறினார்.

    ×