என் மலர்

  நீங்கள் தேடியது "ADMK members protest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒற்றை தலைமை பிரச்சினையால் நிலக்கேட்டையில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  நிலக்கோட்டை:

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் தொண்டர்கள் திடீரென ஓ. பி. எஸ்க்கு ஆதரவாக, அ.தி.மு.க கொடியை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  அ.தி.மு.க வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்று விட்டார்.

  அவர் செல்லும் போது, அவருடைய வாகனத்தை பஞ்சர் ஆக்கிய சிலர் ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கிளை துணைச் செயலாளர் சகாயம் தலைமையில், கிளை பொருளாளர் சகாயராஜ், செயற்குழு உறுப்பினர்கள் மரிய மைக்கேல், அன்புரோஸ் மற்றும் முன்னாள் கிளைச் செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் கட்சி கொடியுடன் நிலக்கோட்டை - செம்பட்டி சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

  அப்போது, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ் தலைமையை ஏற்க வேண்டும். அவரை தாக்க முயன்ற குண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

  அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம் என்று கூறினர். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ×