search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adithanar College"

    • மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை பாலமுருகன் வழங்கினார்.
    • திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி விளக்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் போட்டோகிராபி கிளப் சார்பில் "புகைப்பட கலையின் நுணுக்கங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். போட்டோகிராபி கிளப் இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிக்ஸ்டாக்ல்க் போட்டோகிராபி கிளப்பின் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள் லிங்கத்துரை, லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள், போட்டோகிராபி கிளப் மாணவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையின் முடிவில் போட்டோகிராபி கிளப் மாணவ செயலாளர் புரோசேகர் நன்றி கூறினார்.ஆதித்தனார் கல்லூரியில் முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின் பெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த உளவியல் மருத்துவர் அசோக், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே "இன்றைய சூழலில் கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள்" குறித்தும், அவற்றை மேற்கொண்டு சிறப்புற வாழும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி தன் அனுபவங்கள் மூலம் விளக்கினார். முடிவில் 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி லிபியா நாராயணி நன்றி கூறினார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில், 'இந்திய பொருளாதாரத்தில் சமகால பிரச்சினைகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை வைஜெயந்தி, கருத்தரங்க அமைப்பு செயலாளர் மருதையா பாண்டியன் ஆகியோர் கருத்தரங்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி பல்கலைக்கழக பொருளியல் துறை இணை பேராசிரியர் சிவசங்கர் இந்திய பொருளாதாரத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் விளக்கி கூறினார். அம்பை கலைக்கல்லூரி பேராசிரியர் முத்துசுப்பிரமணியன் இந்திய பொருளாதாரத்தில் மின்துறையில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனை சரிசெய்யும் முறைகள் பற்றியும் விளக்கி பேசினார். தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துகுமார், மாலைசூடும் பெருமாள், சிவ இளங்கோ, சிவமுருகன், முருகேசுவரி, அசோகன், உமா ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் கலந்து கொண்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உறுதிப் பிரிவின் சார்பில், 'அனுபவ கற்றல்- தொடர்பு திறனை மேம்படுத்தும் பயனுள்ள கருவி' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் லெனின் வரவேற்று பேசினார்.

    கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனுபவ கற்றலின் வகைகளை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு பயிற்சிகள், செயல்பாடுகள் மூலம் தொடர்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பாலு, ஷோலா பெர்னாண்டோ, முத்துகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் நன்றி கூறினார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • மாணவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து சபரிகணேஷ் எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு மையம், வேலைவாய்ப்பு மையம் சார்பில், 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மைய பொறுப்பாளர் சேகர் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மனிதவளத்துறை பொது மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் சபரி கணேஷ், இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    வங்கி பொது மேலாளர் ரமேஷ் பேசுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள பணியிடங்கள், ஊழியர்களுக்கான தேர்வு முறைகள், சம்பளம், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். மனித வளத்துறை உதவி மேலாளர் சபரிகணேஷ் பேசுகையில், மாணவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு மைய இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் நன்றி கூறினார்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதி மொழியை வாசிக்க, அலுவலக கண்காணிப்பா ளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை, சமூகரங்கபுரம் பைன் டெக் நிறுவனம் சார்பில், மாநில அளவிலான பொருளியல் கலை இலக்கிய விழா நடந்தது.
    • தமிழகத்தில் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை, சமூகரங்கபுரம் பைன் டெக் நிறுவனம் சார்பில், மாநில அளவிலான பொருளியல் கலை இலக்கிய விழா நடந்தது.

    இதில் தமிழகத்தில் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். வினாடி-வினா, கட்டுரை, பேச்சு, நடனம், ஓவியம் உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    பேராசிரியர் முத்துகுமார் நன்றி கூறினார். பேராசிரியர் மருதையா பாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் பனைமர நிதி நிறுவனர் பற்பநாத பெருமாள் நாடார், மேலாளர்கள் ராஜேஷ், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணை செயலாளரும், தமிழ்துறைத் தலைவருமான கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பகவதிபாண்டியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண ராஜன், அலுவலர்கள் ராஜன் ஆதித்தன், நடராஜன், தபசுமணி, முருகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் சி.கவிதா, ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ், ராமஜெயலட்சுமி, ஏ.கவிதா, வாசுகி, மகேசுவரி, ராஜகுமாரி, மோதிலால் தினேஷ், லோக்கிருபாகர் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் ஏற்புரை வழங்கினார். பயின்றோர் கழக மூத்த உறுப் பினர்கள் மரிய சாமு வேல், கணபதி, ஆறுமுகம், அலெக் சாண்டர், ராஜேந்திரன், சங்கர நாராயணன் ஆகியோர் புதிய செயற் குழு உறுப் பினர்களாக தேர்வு செய் யப் பட்டனர். கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

    • முன்னாள் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிகவியல் துறையில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முன்னாள் முதல்வரும், வணிகவியல் துறை முன்னாள் தலைவருமான கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனசிங் வரவேற்று பேசினார். முன்னாள் துறைத்தலைவர் சவுந்திரராஜன், ஜெயபாஸ்கரன், வக்கீல் கார்மேகம், முன்னாள் அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சாதிக் தொகுத்து வழங்கினார். டிமிட்ரோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், சிவந்தி வானொலி தொழில்நுட்ப அலுவலருமான கண்ணன், ராமச்சந்திரன், சித்திரைகுமார் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சென்றனர். அங்குள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×