search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adai"

    குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1 கப்
    கடலை பருப்பு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    அரிசி - 2 கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் துருவல் - கால் கப்
    முந்திரி - தேவையான அளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை :

    முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊறவைத்த பருப்பு, அரிசியை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் நறுக்கிய முந்திரியை தூவி கைகளால் அழுத்தி விட்டு சுற்றி நெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேரட் - முந்திரி அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏற்படாது. இன்று சுரைக்காய் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய்த் துருவல் - 2 கப்
    சீரகச் சம்பா அரிசி - ஒரு கப்
    துவரம்பருப்பு - அரை கப்
    கடலைப்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு - தலா கால் கப்
    காய்ந்த மிளகாய் - 10
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம்  - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், மீதமுள்ள இரண்டு மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், சுரைக்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும். சுரைக்காய் மசாலா தயார்.

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி தண்ணீரில் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    எட்டு மிளகாயைத் தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசி, பருப்பைக் களைந்து, ஊறவைத்த மிளகாய்,  உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இதனுடன் சுரைக்காய் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி,  சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சுரைக்காய் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காயில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று சத்தான சுரைக்காயில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 1 டம்ளர்
    சுரைக்காய் - 150 கிராம்
    வரமிளகாய் - 4
    உப்பு - சுவைக்கேற்ப
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - 1 கப்



    செய்முறை

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுரைக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அரிசியை நன்கு ஊற வைத்து கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் துருவிய சுரைக்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான, சத்தான சுரைக்காய் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்
    முளைகட்டியகொண்டைக்கடலை - கால் கப்
    முளைகட்டிய கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்
    முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3
    தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கேரட் துருவல் - கால் கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு அரிசியுடன், முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முட்டை அடையை சைடிஷ்ஷகாவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். இன்று இந்த முட்டை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை -  4
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    புதினா - 1 /2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1 /4 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை, புதினா இவற்றை நைசாக அரைத்த பின்னர், வெங்காயத்தை வைத்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்

    அடுப்பில் தோசைகல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். பின்புமறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான முட்டை அடை ரெடி.

    இதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பயறு வகைகள், கீரை போன்றவற்றைத் தினசரியோ அடிக்கடியோ சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். இன்று பருப்புக்கீரை கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை - 1 கப்
    பச்சரிசி - கால் கப்
    முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    பருப்புக் கீரை - அரை கட்டு
    சிறிய வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பருப்புக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

    மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள். 

    இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு இவற்றுடன் முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். 

    பிறகு மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவக்க வேகவைத்து எடுங்கள்.

    சத்தான பருப்புக்கீரை கோதுமை அடை ரெடி.

    விருப்பப்பட்ட எந்த கீரையை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கம்பு, கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - 200 கிராம்
    பச்சரிசி மாவு - 100 கிராம்
    கம்பு மாவு - 300 கிராம்
    முந்திரிப் பருப்பு - 50 கிராம்
    நெய் - 50 கிராம்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    பூண்டுப்பல் - 8
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

    முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.

    சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கம்பு சிறுகீரை அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்பு, முருங்கை கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கை கீரை - ஒரு கப்,
    இட்லி அரிசி - ஒரு கப்,
    வெங்காயம் - 1
    கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்,
    உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்,
    தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை:

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது சத்துமாவு பாசிப்பருப்பு அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - அரை கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    பூண்டு - 2,
    கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

    அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி, துவரம் பருப்பு, மிளகு சீரகம் கொண்டு செய்யும் இந்த டிபனை மாலையில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    தேங்காய் - 1 கப்
    தண்ணீர் - 2¼ கப்
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை

    அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.

    முதலில் மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து  சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்த்து தாளித்த பின்னர் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து கைவிடாமல் நன்றாக கலந்து விடவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

    கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும். ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த அடைகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் பருமனைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இன்று பப்பாளி, சிறுதானியங்களை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    வெங்காயம் - 2,
    கம்பு மாவு - 2 கப்,
    தினை குருணை, அரிசிமாவு - தலா கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
    உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.

    அரைப்பதற்கு :

    துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை - தலா ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறுதுண்டு,
    பட்டை, கிராம்பு - தலா - 2,
    சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளிக்காய துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, திணை குருணை, அரிசிமாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான பப்பாளி - சிறுதானிய அடை ரெடி.

    தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப்பொருட்கள் :

    கோதுமை ரவா - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

    விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×