என் மலர்

  நீங்கள் தேடியது "Accommodation keeper killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொது மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  ஏலகிரி மலை அருகே மஞ்சக்கொல்லை புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி ருக்குமணி (வயது 55). இவர் அத்தனாவூர் பகுதியில் உள்ள எஸ்டி உண்டு உறைவிடப் பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தார்.

  இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து உண்டு உறைவிடப்பள்ளி விடுதிக்குச் செல்ல ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது சாலையோரம் இருந்த பாம்பு இவரை கடிதுள்ளது. இதனால் ருக்மணி மயங்கி கிழே விழுந்தார்.

  இதனால் அங்கிருந்து பொது மக்கள் ருக்மணியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்நிலையில் ருக்மணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  இது சம்பந்தமாக ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×