search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar link"

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
    • முகாமில் அனைத்து வாக்காளர்களும் 6பி படிவத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெறும். முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன் சென்று 6பி படிவத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மேலும் http://www.nvsp.in/ இந்த இணையதளம் மூலமும் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • வாக்குசாவடி மையங்களில் தாசில்தார் தங்கையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களுக்கு படிவம் பி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் , பேய்க்குளம் பகுதியில் வாக்குசாவடி மையங்களில் தாசில்தார் தங்கையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பி படிவத்தை வழங்கி வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் பாலகங்காதரன், ஜெயா, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பசாமி, வேல்முருகன் துரைசிங், விசுவநாதன் மசபியேல், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வள்ளிசுந்தரி, வீரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.
    • வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயகௌகுமார் ஆகியோருக்கு நேரு எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆனால் வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.

    இதனால் உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர், விதவைகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பாதிக்கப்பட்ட முதியோர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையிலும், எம்.எல்.ஏ.,க்களிடமும் புகார் செய்கிறார்கள். இதற்கு தீர்வு காண மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் தொகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து விடுப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் இணைக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நேரு எம்.எல்.ஏ., மனுவில் கூறியுள்ளார்.

    ×