search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A Rasa"

    2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை ஜூலை 30-ந்தேதி ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி 4 மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மலைப்பகுதி மற்றும் சமவெளியில் இந்த தொகுதி அமைந்துள்ளது.

    இந்த தொகுதியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தொகுதியும் ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், தி.மு.க.வில் ஆ.ராசா, அ.ம.மு.க.வில் ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் ஊட்டி சிக்னல் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.

    முதலில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் முடிவு வருமாறு-

    தியாகராஜன் (அ.தி.மு.க.)-17,893

    ஆ.ராசா (தி.மு.க.) - 27,529

    ராமசாமி (அ.ம.மு.க.)-2,948

    ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்)- 1,037

    முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
    திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன. #DMK #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. நியமித்துள்ளது. இதுதவிர மொத்தம் உள்ள 65 ஆயிரம் பூத்களுக்கும் தலா 21 பேர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், காங்கிரசுடன் கூட்டணி அமைவது உறுதி என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் திமு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன.

    இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.


    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி 2007-ம் ஆண்டு பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆனார். தொடர்ந்து 2013-லும் மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த பதவி 2019 ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் கனிமொழி ஏற்கனவே இறங்கியுள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. போராட்டத்துக்கும் ஆதரவு அளித்தது. இதையடுத்து நடந்த கருத்துக் கணிப்பில் கனிமொழி இங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தூத்துக்குடி தொகுதியில் நாடார்கள் ஓட்டு அதிகம் உள்ளது. கிறிஸ்தவர்கள் ஆதரவும் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்.

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் தளம் கொண்டு வரும் முயற்சியிலும் கனிமொழி இறங்கியுள்ளார். எனவே தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன என்று கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மத்திய மந்திரியாக இருந்தபோது பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

    கத்திபாரா மேம்பாலம், கோயம்பேடு, விமானநிலைய மேம்பாலங்களும் இவருடைய முயற்சியால் கட்டப்பட்டன. இது டி.ஆர்.பாலு போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

    தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டால் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இவருக்கு உறுதுணையாக இருந்து தேர்தல் பணியாற்றுவார்கள். எளிதாக வெற்றி பெற முடியும். எனவே டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.


    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆனார். மீண்டும் இதே தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவார் என்று தெரிகிறது. கடந்த முறை 2ஜி வழக்கு காரணமாக இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது அந்த வழக்கில் நிரபராதி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே துணிச்சலுடன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் ஏற்கனவே மத்திய சென்னை பகுதியில் வெற்றி பெற்றவர். மீண்டும் இவர் இதே தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இந்த தொகுதியில் இப்போதே தி.மு.க.வினர் களம் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் முன்பு அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். கடந்தமுறை தொகுதி மாறி நின்றார். இந்த முறை மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. மேலிடம் அனுமதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபோல் தி.மு.க.வின் பிரபலங்கள் பலர் இப்போதே தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி குறித்து கட்சியிடம் தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயம் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்போதே போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்கள் என்று கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர். #DMK #ParliamentElection
    ×