search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashwant Sinha"

    • ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா தோல்வியைத் தழுவினார்.
    • யஷ்வந்த் சின்கா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கொல்கத்தா :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா (வயது 84) தோல்வியைத் தழுவினார்.

    இந்த நிலையில் அடுத்து அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கு கொல்கத்தாவில் நேற்று அவர் பதில் அளித்தார். அப்போது அவர், " நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். பொதுவாழ்வில் என்ன பங்களிப்பு செய்வது என்பது பற்றி இனிதான் முடிவு எடுக்க வேண்டும்" என கூறினார்.

    "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் தொடர்பு கொண்டீர்களா?" என்ற கேள்விக்கு அவர் "இல்லை" என பதில் அளித்தார்.

    மேலும், " யாரும் என்னுடன் பேசவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசினேன்" என குறிப்பிட்டார்.

    • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
    • இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வரும் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் திரவுபதி முர்மு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    போபால் :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்கா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறுகையில், 'ஜனாதிபதி தேர்தலில் கூட பா.ஜனதா கட்சி, 'ஆபரேஷன் கமலம்' திட்டத்தை அரங்கேற்றுகிறது.

    அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பா.ஜனதா அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது. இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. ஏனெனில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பா.ஜனதா அஞ்சுகிறது' என குற்றம் சாட்டினார்.

    ஆளும் பா.ஜனதாவின் இத்தகைய மோசடி குறித்து, ஜனாதிபதி தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் கமிஷனும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டார்.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    கவுகாத்தி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சிதலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "அசாமின் முக்கிய பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பியது. ஆனால் இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வரை இந்த சட்டத்ததை அமல்படுத்த முடியவில்லை.

    ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தனமான வரைவு. அரசியலமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களால் ஆபத்து வரவில்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜனாதிபதி பதவி என்பதும் நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும்.
    • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது. ஜனாதிபதி பதவி என்பதும் நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும்.

    பா.ஜனதா அரசால் நடத்தப்படும் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். நமது கூட்டணி கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் ஒருசேர வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும். அவருக்கும் மதவாதத்துக்கு எதிராக இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு யஷ்வந்த் சின்கா நன்றி தெரிவித்தார்.
    • வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சின்கா

    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவர், மாலையில் அண்ணா அறிவாலயம் வந்தார்.

    அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அங்கு கூடியிருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.

    இந்நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசுகையில், மதச்சார்பின்மையை காக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

    குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் நான்காவது விருப்பமாகவே தன் பெயர் இருந்தாக குறிப்பிட்டார்.

    'இந்த தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன். நாடாளுமன்றம் விதிகளை பின்பற்றி நடப்பதை உறுதி செய்வேன்' என்றும் சின்கா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடை பெற உள்ளது.

    இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது போல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவும் பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், என்.ஆர். இளங்கோ, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட யஷ்வந்த் சின்கா கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை 5 மணிக்கு கார் மூலம் யஷ்வந்த் சின்கா அண்ணா அறிவாலயம் வருகிறார்.

    அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கோருகிறார்.

    இன்று மாலை 7 மணிக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் யஷ்வந்த் சின்கா, கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் தங்கி விட்டு நாளை காலை ராய்ப்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள்.
    • மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிப்பார்கள். யஷ்வந்த் என்னுடன் தொலைபேசியில் பேசினார்' என்று கூறியுள்ளார்.

    மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது.

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்.

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியுமான பி.சி. மோடியிடம் அளித்தார்.

    யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேல்சபை எதிர் கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, ஆ.ராசா, கலாநிதி வீரா சாமி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சியின் கே.டி.ராம ராஜன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மனுதாக்கல் செய்துள்ள யஷ்வந்த் சின்கா நாளை (28-ந்தேதி) முதல் பல மாநிலங்களின் தலைநகரங்களுக்கு சென்று பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகைக்கு 'ரப்பர் ஸ்டாம்ப்' போல் செயல்படுபவருக்கும் மேலாக ஒருவர் தேவைப்படுகிறார். தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது மத்திய அரசின் சர்வாதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாகும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எனது பொது வாழ்வில் நீண்ட அனுபவத்தின் படி தனிநபர் ஒருவரின் நிலையை உயர்த்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யாது. அரசின் கொள்கைகளை பொருத்தே ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல. நமது ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அபாயத்துக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய சூழலில் நாட்டை காக்க மக்கள் விழித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல.
    • 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கும் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவர் பல்வேறு கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருடன் செல்கிறார்கள்.

    இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் யஷ்வந்த் சின்கா கூறியிருப்பதாவது:- ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. எம்.பி.யான எனது மகன் ஜெயந்த் சின்காவின் ஆதரவை பெறாததில் எனக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை. அவர், அரசு தர்மத்தை பின்பற்றுகிறார்.

    நான் எனது தேச தர்மத்தை பின்பற்றுவேன். தற்போது நடைபெற உள்ளது வெறும் ஜனாதிபதி தேர்தல் அல்ல. இது, அரசின் சர்வாதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒரு முன்னோக்கிய அடி. இந்தக் கொள்கைகளை எதிர்த்தாக வேண்டும் என்று இந்திய மக்களுக்கு சொல்லும் செய்தியே இத்தேர்தல்.

    பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்குவதால் அந்த மொத்த சமூகமும் உயர்வு பெற்றுவிடாது. இது வெறும் அடையாளம் என்பதைத் தவிர வேறில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல. நமது ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அபாயத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய சூழலில், நாட்டைக் காக்க மக்கள் விழித்தெழ வேண்டும்.

    'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கும் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்கு தேவையில்லை. அப்படி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பேரழிவு ஏற்படும். நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன். நீதியும், நியாயமும் நிலைபெறுவதை உறுதிசெய்வேன்.'

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
    • யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.

    நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி ஆகியோரிடம் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
    • எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதிய யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை கேட்டுக்கொண்டார்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளை தொடங்கி விட்டார்.

    அந்தவகையில் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதரவை கேட்டுக்கொண்டார். அத்துடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதா மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய யஷ்வந்த் சின்கா, தன்னை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்தபோது அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதிமொழியை நினைவுபடுத்தினார்.

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை முறைப்படி கேட்டுக்கொண்டார்.

    ×