search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Archery"

    • பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தின.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இறுதிப்போட்டியில் திரில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளன.

    இரு அணிகளும் காம்பவுண்டு வில்வித்தை குழு போட்டியில் வெற்றி பெற்றன. இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் டியோடேல், பிரதமேஷ் ஜாக்கர் மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி இறுதி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டி முடிவில், 236-232 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இதேபோன்று, அதிதி கோபிசந்த் சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்நீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில், 234-233 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.

    சமீபத்தில் இந்திய மகளிர் அணி ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

    அன்டல்யா:

    துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள் கொலம்பியாவின் சாரா லோபசை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார்.

    • துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது.

    அன்டல்யா:

    துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், ஓஜாஸ் டியோடால் ஜோடி, சீன தைபே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி

    தங்கம் வென்றது.

    கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அபிஷேக் வர்மா ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அரைஇறுதியில் 5-3 என்ற கணக்கில் துருக்கியை தோற்கடித்து இறுதி சுற்றை எட்டினர்.
    • இறுதி ஆட்டத்தில் இந்திய குழுவினர், சீனாவின் தைபேயை சந்திக்கிறார்கள்.

    பாரீஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில், உலகக்கோப்பை வில்வித்தை (3-ம் நிலை) போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தகுதி சுற்றில் சற்று தடுமாறிய தீபிகா குமாரி, அங்கிதா பாகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் அதன் பிறகு உக்ரைன், இங்கிலாந்தை தோற்கடித்து அரைஇறுதிக்கு வந்தனர்.

    இதன்பிறகு அரைஇறுதியில் 5-3 என்ற கணக்கில் துருக்கியை தோற்கடித்து இறுதி சுற்றை எட்டினர். இதனை தொடர்ந்து நாளை மறுதினம் நடக்கும் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய குழுவினர், சீனாவின் தைபேயை சந்திக்கிறார்கள்.

    ×