search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World AIDS Day"

    • உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர்.
    • ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது.

    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனை சொல்ல முடியாதது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதேசமயம், எய்ட்ஸ் நோய் என்னென்ன காரணங்களால் பரவுகிறது என்கிற புரிதல் இல்லாமல் அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய நிலையும் சமூகத்தில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், சமூகம் மாற வேண்டும். 

    உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், எச்.ஐ.வி நோயால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் வகையிலும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஒரு தினமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு, எய்ட்ஸ் நோய் மீதான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைக்காக ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது. இதற்கான ஒரு சிறப்பு வலைப்பக்கத்தில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை ஐநா அமைப்பு விளக்கியுள்ளது.

    உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர். அவர்களில் 20.8 மில்லியன் பேர் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர் மற்றும் 6.5 மில்லியன் பேர் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ளனர். 

    உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில், 92 லட்சம் மக்கள் அவர்களுக்குத் தேவையான எச்.ஐ.வி. சிகிச்சை பெறாமல் உள்ளனர் என்றும் பலருக்கு தங்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் எச்.ஐ.வி. தொடர்பான பாதிப்புகளால் ஒவ்வொரு நாளும் 1,700 உயிர்கள் பறிபோகின்றன என்றும் 3,500 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

    2030க்குள் பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எய்ட்ஸ் நோயை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை 2015 ஆம் ஆண்டு ஐநா முதன்முதலில் நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைவதற்கு, நம்முன் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா உள்பட சர்வதேச உலக அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் 'சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்' என்பதாகும்.

    எய்ட்ஸ் பாதிப்புள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    13.78 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 2003-ல் இருந்த எய்ட்ஸ் பாதிப்பு 0.83 சதவீதத்தில் இருந்து 0.17 சதவீதமாக குறைந்துள்ளது. இது தேசிய சராசரியான 0.22 சதவீதத்தை விட குறைவானதாகும்.

    மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் பால்வினை தொற்று சிகிச்சை மையங்கள், நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை 2009-10-ம் ஆண்டில் தொடங்கியது.

    இதுவரை 25 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடம் இருந்து நிதியாக பெறப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030-ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே லட்சியமாக ஏற்று பயணிப்போம்.

    எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, மனிதநேயத்துடன் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின பேரணி நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மருத்துவர் பிரேமலதா மாநில விருது பெற்றதை நினைவு கூர்ந்தார்.

    தென்காசி:

    தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி நடத்தப்பட்டது. இதில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிஅவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் அமலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா பேசுகையில், தன் பணியின் போது அதிக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில விருது பெற்றதை நினைவு கூர்ந்தார். அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் அனைத்து விதமான சிகிச்சையும் தங்கு தடையில்லாமல் கிடைக்க அனைத்து மருத்துவர்களும் பணியாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை செய்து வருகிறோம். முறையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் செய்ய தென்காசி ஆஸ்பத்திரி தயாராக இருக்கிறது எனவும் கூறினார். விழாவில் ஏ.ஆர்.டி. வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜயகுமார் , நோடல் ஆபீசர் கார்த்திக் அறிவுடை நம்பி ,அனைத்து துறை மருத்துவர்கள், நம்பிக்கை மையம் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து பொது மக்களுக்கும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடு க்கப்பட்டது. ஏற்பாடு களை தென்காசி அரசு ஆஸ்பத்திரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் செய்திருந்தனர்.

    நாமக்கல்லில் நேற்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை வந்தடைந்தது.

    முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியான “எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடுவேன்” என்ற உறுதி மொழியினை கலெக்டர் வாசிக்க அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, காசநோய் திட்ட துணை இயக்குனர் கணபதி, உதவி இயக்குனர் (சுகாதாரம்) நக்கீரன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட கல்லூரி மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×