search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Asia Cup"

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்தது.
    • தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

    இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    • இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா அரை சதமடித்தனர்.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

    சில்ஹெட்:

    மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகின்றன.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

    அக்டோபர் 1-ம் தேதி - இந்தியா, இலங்கை

    அக்டோபர் 3-ம் தேதி - இந்தியா, மலேசியா

    அக்டோபர் 4-ம் தேதி - இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்

    முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகிறது.

    அக்டோபர் 8-ம் தேதி - இந்தியா, வங்காளதேசம்

    அக்டோபர் 10-ம் தேதி - இந்தியா, தாய்லாந்து

    அக்டோபர் 13-ம் தேதி - முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி

    அக்டோபர் 15-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் விக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இப்போட்டி தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் எக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து 73 ரன் இலங்கை விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. மிதாலிராஜ், தீப்தி சர்மா டக் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் ஜோடி சேர்ந்த மந்தனா- ஹர்மன்பிரித் கவூர் சிறப்பாக விளையாடிய ரன் சேர்த்தனர். மந்தனா 38 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 75 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

    வங்காளதேசம்- மலேசியா இடையேயான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். ஒரு வேளை வங்காளதேசம் தோல்வி அடைந்தால் 6 புள்ளியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
    ×