search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womenes T20 Cricket"

    • முதலில் விளையாடிய இந்திய அணி 164 ரன்கள் அடித்தது.
    • இங்கிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ரன்னுடன் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ரன்னும், தீப்தி சர்மா 22 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.

    அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ரன்களும், டேனி வியாட் 35 ரன்களும், அமிஜோன்ஸ் 31 ரன்னும் அடித்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    ×