என் மலர்

  நீங்கள் தேடியது "Will Smeed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வில் ஸ்மீத் 50 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  லண்டனில் 100 பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ்-சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

  இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சதர்ன் பிரேவ் அணி களமிறங்கியது. அந்த அணி 85 பந்துகளில் 123 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் வில் ஸ்மீத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 50 பந்துகளை சந்தித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம் இந்த தொடரில் அவர் சாதனை படைத்துள்ளார்.


  100 பந்துகள் போட்டியில் யாரும் சதம் அடித்தது இல்லை. முதல் முறையாக இளம் வீரரான வில் ஸ்மீத் இந்த தொடரில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

  ×