search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvENG"

    • முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.

    பின்னர் தொடர் யாருக்கு என்பது நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி அதிகாலை) நடைபெற்றது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. 

    • அதிரடியாக விளையாடிய சால்ட் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் - சால்ட் களமிறங்கினர். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது. ஜாஸ் பட்லர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சால்ட் 119 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் மட்டுமே அரை சதம் அடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 20டி போட்டி நாளை நடைபெறுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வில் ஜேக்ஸ் (73), ஹாரி ப்ரூக் (43 அவுட் இல்லை), ஜோஸ் பட்லர் (58 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 32.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி (நாளைமறுதினம்) நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது ஒருநாள் போட்டியாகும்.
    • இதுவரை நடந்த 103 போட்டியில் இங்கிலாந்து 52-ல், வெஸ்ட்இண்டீஸ் 45-ல் வெற்றி பெற்றுள்ளன.

    ஆன்டிகுவா:

    பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அந்த அணி 326 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மேலும் 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக், கிராவ்லி, பில்சால்ட் ஆகியோரும் பந்து வீச்சில் அட்சின்சன், ரீகான் அகமது ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.


    ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் இந்த ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 104-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இங்கிலாந்து 52-ல், வெஸ்ட்இண்டீஸ் 45-ல் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டம் முடிவு இல்லை.

    கிரேனடாவில் நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது போட்டி கிரேனடாவில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான டாஸும் சுண்டப்பட்டது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்தது.

    போட்டியை நடத்த முடியாத அளவிற்கு மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. 4-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன.

    இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கால் காயம் காரணமாக பந்து வீசமாட்டார். பேட்டிங் மட்டுமே செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ஹோல்டர், 2. ஃபேபியன் ஆலன், 3. தேவேந்த்ர பிஷூ, 4. டேரன் பிராவோ, 5. கிறிஸ் கெய்ல், 6. ஷிம்ரோன் ஹெட்மையர், 7. ஷாய் ஹோப், 8. எவின் லெவிஸ், 9. அஷ்லே நர்ஸ், 10. கீமோ பால், 11. நிக்கோலஸ் பூரன், 12. ரோவ்மன் பொவேல், 13. அந்த்ரே ரஸல், 14. ஒஷானே தாமஸ்.
    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய், 3-வது வீரர் ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் நாளைமறுநாள் (28-ந்தேதி) ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இந்தத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேர்ஸ்டோவ் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேசன் ராய் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர்.

    ஜேசன் ராய் 82 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 110 ரன்கள் சேர்த்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். ஜோ ரூட் 81 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    மொயீன் அலி 18 பந்தில் 24 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 14 பந்தில் 22 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

    பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி களம் இறங்கியது. அந்த அணி 43.5 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஜோ ரூட்டை பார்த்து நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? என்று கேட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு நான்கு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.

    கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள்?. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா?’’ என்றார்.

    அதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.



    கேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் ஜோ ரூட்டை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் தண்டனையில் இருந்து தப்பித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 209 பந்தில் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் துள்ளியமாக பந்து வீசினார். ஆனால் ஜோ ரூட் அந்த பந்துகளில் ஆட்டமிழக்காமல் தப்பினார். இதனால் விரக்தியடைந்த கேப்ரியல் ஜோ ரூட்டை பார்த்து முனுமுனுத்தார். போட்டியை பார்தத ரசிகர்களுக்கு அவர் ஏதோ திட்டினார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது புரியவில்லை. மேலும், மைக் ஸ்டம்பில் கேப்ரியல் பேசியது பதிவாகவில்லை.

    போட்டி முடிந்த பின்னர், ஜோ ரூட்டிடம் இதுகுறித்து கேட்டதற்கு, களத்தில் நடந்தது பற்றி கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் கேப்ரியல் நடுவரின் எச்சரிக்கையுடன் தப்பினார். ஒருவேளை மைக் ஸ்டம்பில் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
    செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்டில் ஜோ ரூட் சதம் அடித்தார். #WIvENG #JoeRoot
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 80-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 16-வது செஞ்சூரியாகும். அவருக்கு உதவி புரியும் வகையில் ஜோ டென்லி, பட்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 111 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். டென்லி 69 ரன்னும், பட்லர் 56 ரன்னும் எடுத்தனர். கேமர் ரோச், கேப்ரியல், பவுல், ஜோசப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

    இங்கிலாந்து அணி 448 ரன்கள் முன்னிலை பெற்று கைவசம் 6 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருக்கிறது. அந்த அணி முதல் 2 டெஸ்டில் தோற்று ஏற்கனவே தொடரை இழந்துவிட்டது. இந்த டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்துடன் இங்கிலாந்து உள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நாளை நடக்கிறது. #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட்டில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டிலும் வென்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் பிராத்வைட், ஷாய் ஹோப், ஹெட்மையர், டவ்ரிச் பேட்டிங்கிலும், ரோச், கேப்ரியல், ஜோசப் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். தொடரை முழுமையாக இழக்காமல் இருக்க இங்கிலாந்து வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

    முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் ஒருநாள் போட்டிக்கான அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக சாமவேல்ஸ் அணியில் இடம்பெறவில்லை.

    39 வயதாகும் கிறிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டிகளில் 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் தற்போதுதான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
    ×