search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WELFARE PLAN ASSISTANCE"

    • புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்
    • கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கற்றல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்கிட தலா ரூ.24,250 மதிப்பீட்டில் ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 294 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கற்றல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்கிட தலா ரூ.24,250 மதிப்பீட்டில் ஆவாஸ் செயலியுடன் கூடிய கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.

    மேலும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,350 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும் என ஆகமொத்தம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×