search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Utsava festival"

    • அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    கோவை,

    கோவை சித்தாபுதூரில் அய்யப்பசாமி பொற்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அய்யப்ப சாமி ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கிறார். சபரி மலையில் கடைப்பிடிக்கின்ற ஆச்சார அனுஷ்டானங்கள் இந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது.

    இந்த கோவிலின் 54-வது உற்சவ திருவிழா மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் 68-வது ஆண்டு விழா நாளை 20-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலின் தந்திரி பிரம்மஸ்ரீ பாலக்காட்டிலத்து சிவபிர சாத் நம்பூதிரி தலைமையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பரஞ் சோதி முன்னிலையில் கொடி யேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து முத்தா யம்பிகை செண்டை மேளம் நடைபெறும். 21-ந் தேதி 2-ம் திருவிழாவில் விநாய கருக்கு சிறப்பு பூஜையும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நிறைபிறை சமர்ப்பித்தல் நடைபெறும்.

    இரவு 7.30 மணிக்கு நாட்டிய நாடகம் நடைபெறும். 22-ந் தேதி 3-ம் திருவிழாவன்று, அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண குசேலா என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.

    23-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7.30 மணிக்கு பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு நாட்டிய மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 25 -ம் தேதி 6-ம் திருவிழா அன்று காலை பிரம்ம ரக்ஷஸிற்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு ஐயப்ப சேவா சங்கத்தின் 68- வது ஆண்டு விழா நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு இசைத்தென்றல் கலை மாமணி வீரமணி ராஜூ குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி யில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    26-ம் தேதி 7-ம் திருவிழாவன்று காலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, அதன்பின் அய்யப்பசாமி அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் பள்ளி வேட்டை நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்.

    செண்டை மேளம், பஞ்சவாத்தியத்துடன் ஆவாரம்பா–ளையம் விநா யகர் கோவிலில் புறப்பட்டு பாரதியார் ரோடு, வி.கே.கே. மேனன் ரோடு சந்திப்பு வழியாக கோவிலை அய்யப்பசாமி வந்தடைவார்.

    27-ந் தேதி 8-ம் திருவிழா வன்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருக்கணிதரிசனம், விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜைகள் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் அய்யப்ப சாமி திருவீதி உலா வருவார்.

    திருவிதி உலா நிகழ்ச்சியில் காவடி, சிங்காரி மேளம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் ஆகியவற்றுடன் பக்தர்கள் புடை சூழ சின்னசாமி ரோடு, சத்தி ரோடு, கிராஸ்கட் ரோடு, 11- ம் நம்பர் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குள த்திற்கு அய்யப்ப சாமி வந்தடைவார். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினசரி காலை யானை மற்றும் மேள வாத்தியத்துடன் சீவேலியும், மாலை 5 மணிக்கு காட்சி சீவேலியும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
    • தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா நேற்று 4ந்தேதி தொடங்கியது. வரும் 13 ந்தேதி வரை பல்லடம் பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில் விழா நடைபெறும். தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    நேற்று புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று 5ந்தேதி சாய் அற்புதம் திருப்பூர் ஆடிட்டர் நடராஜ் ஆன்மீக சொற்பொழிவு, 6 ந்தேதி கோவை ஸ்ரீ சாரதா நாராயணன் குழுவினரின் பஜனை கச்சேரி, ஆன்மீக பாட்டு கச்சேரி, 7 ந்தேதி அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் ஆன்மீக பாட்டு கச்சேரி, 8 ந்தேதி பல்லடம் ஸ்ரீசாய் நாட்டியாலயாவின் பரத நாட்டியம், 9 ந்தேதி திங்கள்கிழமை கவிஞர் சுந்தரபாண்டியனி்ன் திருநாவுக்கரசுத்திருமகனார் ஆன்மீக சொற்பொழிவு, 10 ந்தேதி பக்தியிலும் பண்பாட்டிலும் பெரிதும் விஞ்சி நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடுவர் புலவர் சிவக்குமார் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், 11 ந்தேதி மார்கழியின் மகிமை என்ற தலைப்பில் ஞானபாரதி ஆனந்தகிருஷ்ணனின் ஆன்மீக சொற்பொழிவு, 12 ந்தேதி மாணிக்கவாசகப்பெருமானார் என்ற தலைப்பில் கவிஞர் சுந்தரபாண்டியனின் ஆன்மீக சொற்பொழிவு, 13 ந்தேதி வரம் தரும் வராகி என்ற தலைப்பில் ஈரோடு கவிஞர் பத்மநாபன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.
    • மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாகாளியம்மன், விநாயகர், ஊத்துக்காட்டு மாரியம்மன், மகாசக்தி கங்கையம்மன், கங்காதீஸ்வரர், பாலமுருகன் கோவில்கள் இருந்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.

    தொடர்ந்து 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதியிலிருந்து 15-ந் தி வரை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8 மணிக்கு சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு 11.30 மணியளவில் காளியம்மன் கடற்கரைக்கு சென்று ஜலம் திரட்டி வந்து பக்தர்கள் செடல் குத்துதல், சாகைவார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் இரவில் முத்துப்பல்லக்கில சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, நிர்வாகிகள் அன்பழகன், மாதவன், ஆறுமுகம், அய்யனாரப்பன், பலராமன், கோவிந்து, கலை வாணன், இளையராஜா, லெனின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டியில் தண்டாயுதபாணி கோவிலில் 2-ம் ஆண்டு ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் நான்கு கால பூஜையுடன் தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    மலர் அலங்காரத்தில் வண்ண வண்ண விளக்கு ஒளியில் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியருக்கு அரோகரா கோஷம் முழங்க ஊஞ்சல் உற்சவ வைபோக விழா நடந்தது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து ஊஞ்சல் உற்சவ விழாவை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாசன், சிவகாமி ஆச்சி குடும்பத்தினர் செய்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஊஞ்சல் உற்சவம் தேவகோட்டை, கண்டவராயன்பட்டி ஆகிய இரு ஊர்களில் மட்டும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×