search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UPI"

    • 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
    • யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

    சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    • இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
    • பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.

    பாரிஸ்:

    யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.

    இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

    இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

    • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
    • தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.


     

    வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

    வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். 

    • துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை.
    • தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த போட்டியை காண ஆஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரிச்சர்டு மார்லஸ் இந்தியா வந்திருந்தார்.

    நேற்றைய போட்டியை கண்டுகளித்த நிலையில் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இன்று அளிக்கப்பட்டது. பிறகு டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கடையில் எலுமிச்சை பழச்சாறு வாங்கி பருகினார். பிறகு தெருவோர கடையில் லட்டு ஒன்றை வாங்கி சாப்பிட்ட துணை பிரதமர் ரிச்சர்ட் அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார். 

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    • புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.

     

    புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.

    இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • புதிய வகை ஏ.டி.எம்.- யு.பி.ஐ. ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
    • புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், "யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. 

    • இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.
    • பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார்.

    இந்தியாவில் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகம் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார். அவர் மாநாட்டின் இடையே பெங்களூரு நகர வீதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினார். அப்போது ஒரு கடையில் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிய அவர் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஜெர்மன் தூதரகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

    மேலும் இது தொடர்பான பதிவு யு.பி.ஐ. கட்டணங்களின் எளிமையை அனுபவிக்க முடிந்தது என பதிவிட்டுள்ளது.

    • பிரான்ஸ் அதிபர், பிரதமர், செனட் தலைவர் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்
    • பிரான்ஸ் வாழ் இந்தியர்களை சந்தித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்

    இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார்.

    மேலும், புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

    இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும்.

    2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, பொதுமக்கள் ஐந்து ரூபாய் முதல 10 ரூபாய் என டீ அருந்துவதற்குக் கூட UPI பயன்படுத்தி வருகிறாரக்ள்.

    கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது.

    இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளத்தில் UPI முறை நடைமுறையில் உள்ளது.

    • நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
    • நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.

    இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:

    1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே

    QCGA பிரைமரி கேமரா

    1450 எம்ஏஹெச் பேட்டரி

    ப்ளூடூத் 5.0

    3.5mm ஹெட்போன் ஜாக்

    மைக்ரோ யுஎஸ்பி 2.0

    மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்

    எஸ் 30 பிளஸ் ஒஎஸ்

    வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ

    2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)

    IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

     

    நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:

    1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே

    QCGA பிரைமரி கேமரா

    1000 எம்ஏஹெச் பேட்டரி

    யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி

    மைக்ரோ எஸ்டி சப்போர்ட்

    எஸ் 30 பிளஸ் ஒஎஸ்

    வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ

    2ஜி, டூயல் சிம்

    IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    “ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 
    ×