search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK PM Election"

    • ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
    • ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.

    இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

    நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், பிரதமராக நியமிக்கப்படுவார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2ந் தேதி முடிவடைந்தது.  இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளனர்.வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது.

    இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக நியமிக்கப்பட்டவுடன், அதிகரித்து வரும் எரிசக்தி கட்டண குறைப்பு மற்றும் விநியோக சீராமைப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    தமக்கு ஆதரவளித்த சகாக்கள், பிரச்சாரக் குழுவினர் மற்றும் அனைத்து கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரிஷசுனக் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று வாக்குகள் எண்ணப்பட்டு 5-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.
    • இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு இன்று 5 மணிக்கு முடிகிறது. 1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணையவழியில் வாக்கு அளிக்கிறார்கள். இதையொட்டி ரிஷி சுனக், லண்டன் நகரில் வெம்ப்லியில் உள்ள கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் தனது கடைசி பிரசார கூட்டத்தில் பெற்றோர் யாஷ்விர், உஷா மற்றும் மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஆகியோருடன் தோன்றிப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த இறுதிக்கட்ட பிரசாரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் என்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடத்தூண்டிய 2 பேர், அதாவது என் அம்மா, அப்பா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் சேவையும், மக்களுக்கு அவர்கள் செய்த செயல்களும்தான் நான் அரசியலில் குதிக்க உத்வேகம் தந்தன. அம்மா, அப்பா, எப்போதும் நீங்கள் தியாகம் செய்ததற்கும், உங்கள் குழந்தைகளுக்கு உங்களது வாழ்க்கையை விட ஒரு சிறப்பான வாழ்க்கையை அளிக்க பாடுபடுவதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் கடின உழைப்பு, நம்பிக்கை, குடும்பத்தின் மீதான உங்கள் அன்பு ஆகியவற்றால் நம் நாட்டில் யாரும் எதையும் சாதிக்க முடியும், அதற்கு எல்லையே கிடையாது என்று எனக்கு கற்பித்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி. என் மனைவி அற்புதமானவர், அன்பானவர். 18 ஆண்டுகளுக்கு முன்பாக தனது உயரங்களை விட்டுக்கொடுத்து விட்டு, எளியவனான என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி.

    நான் கடந்த 2 வருடங்களாக ஒரு நல்ல கணவராகவும், தந்தையாகவும் இருக்கிறேன். நான் என் குழந்தைகளை அளவற்று நேசிக்கிறேன். என் மனைவியை அளவற்று நேசிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் வாழ்க்கையில் நான் உடன் இருக்க விரும்பியும், அது முடிந்ததில்லை.

    நான் நமது நாட்டைப்பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றை என்னால் வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் போட்டியில் உள்ளேன். மக்களின் ஆதரவைப்பெறுவதில் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று முடிகிற பிரதமர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு 5-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார். இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிகவும் கடினமான நேரங்களில் அக்‌ஷதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போனில் அனுப்புவார்.
    • கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுத்தது என்றார்.

    இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததால் புதிய பிரதமருக்கான தேர்வை ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    இதன் இறுதிச் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், மந்திரி லிஸ் டிரஸ் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் முன்னிலையில் உள்ளார்.

    இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் வாட்போர்ட்டில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரிஷி சுனக் கூறும் போது, பிரதமர் தேர்தல் கடுமையான சவாலாக இருக்கிறது. மிகவும் கடினமான நேரங்களில் அக்‌ஷதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போனில் அனுப்புவார். கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுத்தது என்றார்.

    ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு கோவில் சார்பில் கிருஷ்ணர் படங்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. அவர்கள் கோ -பூஜையும் செய்தனர்.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் லிஸ் டிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
    • இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பின்தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர். அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 26 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.

    அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    570 கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 39 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×