search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Panchayat"

    • கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கிப் பாண்டியன், வங்கி மேலாளர்கள் ஜெயராம், சதீஷ்குமார், கால்நடை மருத்துவர்கள் அகன்யா, சிவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வி கறவை மாடுகளை வழங்கி திட்டம் குறித்து விளக்கவுரை உரையாற்றினார். சமூக ஆர்வலர் முருகன் வரவேற்றார்.

    தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகலெட்சுமி, தமிழ்நாடு கிராமவங்கி முன்னாள் மேலாளர் அசரப், தி.மு.க. சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சொரிமுத்து, கவுன்சிலர்கள் பாண்டி, செய்யது அலிபாத்து, கைக்கொண்டான் பொன்னுசாமி, சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கறவை மாடுகளை பெறும் பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உடன்குடி பேரூராட்சி துணைத்தலைர் சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் வடக்குத் தெரு, வில்லிகுடியிருப்பு விநாயகர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகர தி.மு.க. செயலருமான சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் உமா, மும்தாஜ்பேகம், பிரதீப் கண்னண், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், முன்னாள் நகர தி.மு.க. செயலர் கனகலிங்கம், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டப் பிரதிநிதி ஹீபர் மோசஸ், தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், மனோ, கணேஷ், நாராயணன், தங்கம், திரவியம், உதயசூரியன், ஷேக் முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
    • அனைத்து தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், மருதவள்ளி, உலகேஸ்வரி, ராஜலட்சுமி, அருணாசலம், விக்னேஷ், கலா, ரமேஷ், கருப்பாயி அம்மாள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தார்.
    • பொது கழிப்பிடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார். பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினை புனரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் உடன்குடிபேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலைய வணிக வளாகங்களில் நெகிழிப்பை உபயோகம் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் நெகிழிபை தடுப்பு மற்றும் துணிப்பை பயன்பாடுகளை அதிகரிக்க செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

    பின்னர் திடக்கழிவு மேலாண்மை திடலில் குப்பைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். தேவையான பராமரிப்பு மற்றும் நவீன மயமாக்குதல் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது பேரூராட்சி செயலாளர் பாபு, தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி மற்றும் ஊழியர்கள் உடன் சென்றனர்.

    • தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.

    தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • போலீஸ் சோதனைச்சாவடி இடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள போலீஸ் சோதனைச்சாவடி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் ஊருக்கு வடபுறம் பாலம் அருகே இடமாற்றம் செய்யவும், பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், சிவகிரி பேரூராட்சி பகுதியில் அங்கீகாரம் பெறாத அனைத்து மண் சாலைகளையும், சாலை பதிவேடுகளில் பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி அனைத்து சாலைகளிலும் தார்சாலை, வாருகால் வசதி, மின்வசதி செய்வது மற்றும் பகுதி சபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மன்றத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலையத்தில் பழுது அடைந்துள்ள பழைய கட்டிடங்களிலுள்ள பராமரிப்பு பணியை சீரமைக்க தீர்மானம்.
    • கூட்டத்தில் 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தேர்வுநிலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள மண் தரையாக உள்ள ரோடுகளை தார் சாலையாகவும் மற்றும் பேவர் பிளாக், வாறுகால் வசதி, சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது எனவும், இதனை வரும் நிதியாண்டில் பணிகள் முழுவதும் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    சிவகிரி பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலையத்தில் பழுது அடைந்துள்ள பழைய கட்டிடங்களிலுள்ள பராமரிப்பு பணியை சீரமைப்பது எனவும், பஸ் நிலையத்தின் கீழ்புறம் பயணிகளின் நலனுக்காக நிழற்குடை அமைப்பது எனவும், பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சுற்றி வரக்கூடிய தரைப்பகுதி குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை அகற்றி சீரான பாதையாக அமைப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 18 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    ஆய்க்குடி, அகரகட்டு, கம்பிளி பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள், பயணிகள் நிழல் குடை, கழிவுநீர் ஓடை, வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் முன்பு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், பேரூராட்சி துணை தலைவர் மாரியப்பன், ஆய்க்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
    • முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஏர்வாடி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, மருதம், பூவரசு போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், துணைத்தலைவர் மோலி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருக்குறுங்குடி பேரூராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் அடுத்த கட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. என பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் கூறினார்.

    ×