என் மலர்
நீங்கள் தேடியது "Tirupur city"
- பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது.
- ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் ராயப்பண்டாரம் வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி இவருடைய வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள் வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், வானுமாமலை, நல்ல கண்ணு, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இசக்கி பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது. ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது. இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.