search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanee.Jayakumar"

    • குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    மங்கலம் தொகுதியில் வில்லியனூர் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    என்ன பணிகள் தொடங்கப்பட உள்ளது? கிடப்பில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். மங்கலம் தொகுதியில் சாலைகளை மேம்படுத்தி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, வி.ஏ.ஓ. அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளது. இதன் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது.

    இவற்றை சீரமைப்பது குறித்து அமைச்சர் தேனீஜெயக்குமார் இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். கால்நடை மருத்துவமனை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மற்ற பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோ சனையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்தியா சுதந்திர மடைந்தாலும், பிரெஞ்சு ஆட்சியின் கீழ் புதுவை இருந்து வந்தது.

    இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

    அதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட்டு 16-ந் தேதி புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, புதுவை இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றது.

    இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுவை சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவுத் தூண், நினைவு மண்டபம் உள்ளது. புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.

    சபாநாயகர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் போலீஸ் மரியாதையை ஏற்றனர். இதன்பின் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலைமை செயலர் ராஜீவ்வர்மா, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தியாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற தியாகி ராமேலிங்கம் கூறியதாவது, ஆண்டுதோறும் இந்த நாளில் கவர்னர் கொடியேற்றுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 3 ஆண்டாக இந்த சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். புதுவை சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகளை அரசு மதிப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.

    • குரூப் ‘பி’ பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிவடைந்த வுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    அவர் பேசும்போது, குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்-அமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்டோரு க்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க.

    எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், செந்தில்குமார் ஆகியோர் இடஒதுக்கீட்டில் சில சந்தேகங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை நகல் வழங்கப்படும் என்றார். முன்னதாக கேள்விநேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி, அரசிதழில் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

    அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் முன் பாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்வாக 8-ம் நாளான சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது.

    உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார். தேரை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வடம் இழுந்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஊர் மக்கள் ஒன்றுகூடி தேரைவடம் பிடித்து இழுந்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12 மணியளவில் மீண்டும் கோவிலை அடைந்தது.

    சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பங்கேற்கின்றன.

    • புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மனிதநேய இடுகாட்டு புனித பணியா ளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் புனித பணியாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க தலைமை ஆலோசகர் மேகராஜ், கௌரவத் தலைவர் ஆனந்தராஜ், மாநில தலைவர் ராமு, பொதுச் செயலாளர் காளிதாஸ், பொறுப்பாளர்கள் உலக நாதன், ஜெகதீசன், கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் புனித பணியாளர்க ளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பணியாளர்களுக்கு இலவச வீடு, மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    • மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதியில் ஏழை பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் 240 பயனாளிகளுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்கினார்.

    தொடர்ந்து மங்கலம் தொகுதியில் ஏழைகளுக்கு அரசு கொடுத்த மனைப்பட்டாவுக்கு புதிய வழிகாட்டு மதிப்பீடுடன் கூடிய மனைப்பட்டாவை 700 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால், முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது. புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும்.
    • விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது.

    புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் சாதனை யாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், சிறப்பாக சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள், அரசு துறையில் சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது. இதில் சமூகநல துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×