search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu Day"

    • மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
    • ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.

    இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-

    இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.

    பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.

    உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.

    இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.

    இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும்.

    நெல்லை:

    ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண் டாடப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லையில் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் தமிழ்நாடு நாள் இன்று வண்ணார்பேட்டையில் கொண் டாடப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், மாணவ- மாணவி களுக்கும், பொது மக்க ளுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப் பட்டது.

    நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து இதற்காக போராடிய மா.பொ.சி., மார்சல் நேசமணி, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம், விநாயகம், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழ்ச் சான்றோர் பேரவை மாநகர தலைவர் வக்கீல் சுதர்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜபார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன், மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் ம.தி.மு.க. நட ராஜன், த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜமால், நயினார், சுலைமான், மக்கள் இனப்படு கொ லைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் மணி பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இளைஞ ரணி தலைவர் மணிமாறன், பொன்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
    • அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில், மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி காந்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

    மேலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்ததுடன், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் அறியும் வண்ணமும், மேலும்அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிமாணவ- மாணவிகள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு நடைபேரணியை காந்தி வித்யாலயா பள்ளியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

    இப்பேரணி மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த சுமார்250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, தமிழ் மொழியின் பெருமையும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளையும் உரக்கச் சொல்லி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்த வரலாற்றுப் பதிவுகள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடப்பட்டது.

    மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.குறிப்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்ப ட்டுள்ள இப்புகைப்பட கண்காட்சி யானது இன்று முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட ஏ ற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிர மணியன், மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்ம நாபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்பாலமுரளி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (திருப்பூர்) பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை-18 ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழாவினை மாநில முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணமும், மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ-மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது காலை 9.30 மணியளவில் திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படக்கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்புகைப்படக்கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • மெரினா கடற்கரையில் ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் உருவாக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967)-ம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா 18.07.2022 (இன்று) காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு உருவான வரலாறு என்ற தலைப்பில் சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும் என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதனும், தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள் என்ற தலைப்பில் வாலாசா வல்லவனும், தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன் என்ற தலைப்பில் முனைவர் ம. இராசேந்திரனும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனும் கருத்துரையாற்றுகிறார்கள்.


     



    மின்னொளியில் ஜொலிக்கும் தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபம்

    கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய வகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத்துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

    இவ்விழாவினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

    கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மணற்சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழிப் பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது.

    சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை 18.07.2022 முதல் 20.07.2022 வரை 3 நாள் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கண்காட்சிகளை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    ×