search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Thalaivas"

    • 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
    • இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது.

    பஞ்ச்குலா:

    10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் நேற்று நடந்த 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் 74-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் நிறைவு செய்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டத்தில் 9 வெற்றி, 13 தோல்வியுடன் 51 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் புதிய சாதனை படைத்தது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் 70 புள்ளிகள் பெற்ற முதல் அணி தமிழ் தலைவாஸ் ஆகும். இதற்கு முன்பு பாட்னா அணி பெங்காலுக்கு எதிராக 69 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.

    மேலும் இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு பாட்னா-பெங்கால் மோதிய ஆட்டத்தில் 110 புள்ளிகள் எடுக்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி 6 முறை பெங்காலை ஆல் ஆவுட் செய்தது. இதுவும் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் 5 முறை ஆல் அவுட் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இன்னும் 5 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. வருகிற 26-ந்தேதி 'பிளே ஆப்' சுற்று தொடங்குகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நெய்டா, மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது.

    7-வது கட்ட போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 36-34 என்ற கணக்கில் புனேரி பல்தானையும், பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற கணக்கில் உ.பி. யோதாவையும் தோற்கடித்தன.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு இந்த அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த அணி டெல்லி (42-31), தெலுங்கு டைட்டன்ஸ் (38-36), உ.பி.யோதா (46-27) ஆகியவற்றை தோற் கடித்து இருந்தது.

    பெங்கால் வாரியர்ஸ், மும்பை, பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர், அரியானா, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனே ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. அரியானா அணி தமிழ் தலைவாசை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 8-வது வெற்றிக்காகவும், பாட்னா 6-வது வெற்றிக் காகவும் காத்திருக்கின்றன. இதுவரை 70 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 10 வெற்றி, 2 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் 48 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெல்லி 40 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குஜராத் 39 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மும்பை 35 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அரியானா 34 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    பெங்கால், பெங்களூரு, பாட்னா, உ.பி. யோதா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    • 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும்.
    • பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    நொய்டா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 50-வது லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொண்டது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் ஒன்றிரண்டு புள்ளி வித்தியாசத்திலேயே போட்டி நகர்ந்தது.

    கடைசி 2 நிமிடம் இருக்கும் போது தலைவாஸ் 36-33 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த திடமான முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள தவறினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளை திரட்டிய பெங்களூரு புல்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் பாரத் 9 புள்ளியும், தலைவாஸ் அணியில் நரேந்தர் 12 புள்ளியும் எடுத்தனர்.

    9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும். சென்னையில் நடந்த லீக்கில் 4 ஆட்டங்களிலும் சறுக்கிய தமிழ் தலைவாசின் பரிதாபம் தொடருகிறது. பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 51-42 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி. யோத்தாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    • இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.
    • 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனேயைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு தொடங்கியது. இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் களம் இறங்கிய தமிழக தலைவாஸ் அணியினர் தொடக்கத்தில் நன்றாக ஆடினர். எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20-21 என்ற கணக்கில் சற்று பின்தங்கி இருந்தனர்.

    ஆனால் பிற்பாதியில் பாட்னா வீரர்களின் கை ஓங்கியது. தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல்-அவுட் ஆக்கி பதிலடி கொடுத்ததுடன் மளமளவென புள்ளிகளை திரட்டினர்.

    முடிவில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்தது. அதிகபட்சமாக பாட்னா அணியில் சுதாகர் 11 புள்ளிகள் எடுத்து ரைடில் கலக்கினார். தமிழ் தலைவாஸ் தரப்பில் ஹிமான்ஷு 8 புள்ளிகள் எடுத்தார்.

    5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறது. பாட்னா அணி 3 வெற்றி, 3 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து நடந்த திரில்லிங்கான மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வென்றது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • புரோ கபடி லீக்கில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும.

    இந்த கபடி திருவிழா நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா அணிகளுக்கும் உரித்தான நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த சுற்று முடிவில் புனேரி பால்டன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் (3 வெற்றி, ஒரு தோல்வி, 2 'டை') 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (3 வெற்றி, 2 தோல்வி, ஒரு 'டை') 20 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் (4 வெற்றி, ஒரு தோல்வி) 20 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    இந்த நிலையில் 4-வது சுற்று போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரை நாங்கள் நன்றாக தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் டாப்-6 இடங்களுக்குள் முன்னேற முடியும். எங்கள் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எங்களது ஆட்டத்தில் பலவீனம் எதுவுமில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருக்கின்றனர். ரசிகர்களின் ஆதரவு ஈடுஇணையற்ற சக்தியாகும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நன்றாக தயாராகி இருக்கிறோம்.' என்றார்.

    தமிழ் தலைவாஸ் கேப்டன் சாகர் ரதி கூறுகையில், 'இந்த சீசனை மறக்க முடியாததாக மாற்ற தயாராகி வருகிறோம். சொந்த மைதானத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.

    • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி தோல்வி.
    • இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.

    மும்பை:

    புரோ கபடி 9-வது லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று மும்பையில் நடைபெற்றன. 

    இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

    இரண்டாவதாக நடைபெற்ற பிளே ஆப் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி சமனில் முடிந்தது
    • தபாங் டெல்லியை வீழ்த்தியது யு.பி.யோத்தா.

    புனே:

    9-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. 


    நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

    • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
    • 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

    புனே:

    9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 


    இந்த நிலையில் இரவு  8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

    9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி, ஒரு டையுடன் 10 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

    கடைசி இரண்டு ஆட்டங்களிலும் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பல்டன் அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகளும் மோதுகின்றன.

    புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது. #ProKabaddiLeague
    கொல்கத்தா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்தித்தது. இதில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என்று கணக்கில் சற்று முன்னிலை பெற்றது.

    இதையடுத்து பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 20-20 என்று சமநிலை வந்த பிறகு அரியானாவின் கை கொஞ்சம் (26-23) ஓங்கியது. இதன் பின்னர் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர், அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகளை அள்ளினார். ஒரு முறை 3 பேரை அவுட் செய்து, ஆல்-அவுட் ஆக்கி அணியை நிமிர வைத்தார். தலைவாஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில் கடைசி நிமிடத்தில் 2 புள்ளி முன்னிலை கண்டிருந்தது.

    இந்த சமயத்தில் ரைடுக்கு சென்ற அஜய் தாக்கூர், நேரத்தை கடத்தும் நோக்கில் யாரையும் அவுட் செய்ய முயற்சிக்காமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதுவும் தங்கள் பகுதி வீரர்களை நோக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அரியானா வீரர்கள் ஓடிச்சென்று அவரை அப்படியே மடக்கி தூக்கி தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் திகைத்துபோன அஜய் தாக்கூர் பரிதாபமாக வெளியேறினார். இதன் பின்னர் அரியானா வீரர் விகாஸ் கன்டோலா ரைடு மூலம் ஒரு புள்ளி எடுத்து, திரிலிங்கான ஆட்டத்தை 40-40 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தார். அத்துடன் ஆட்ட நேரமும் முடிவுக்கு வந்தது. 25 முறை ரைடுக்கு சென்று அதில் 17 புள்ளிகளை சேர்த்து அணிக்கு வலுவூட்டிய அஜய் தாக்கூர் இறுதி கட்டத்தில் செய்த தவறினால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

    இத்துடன் இந்த சீசனில் தமிழ் தலைவாசின் போட்டி முடிவுக்கு வந்தது. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 13 தோல்வி, 4 டை என்று மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு நடையை கட்டியது. கடந்த ஆண்டு அறிமுகம் ஆன தமிழ் தலைவாஸ் அணி, முதலாவது சீசனிலும் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத், மும்பை, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு ‘பி’ பிரிவில் பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddiLeague #HaryanaSteelers #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
    கொல்கத்தா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 15 - 15  என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணியினர் அபாரமாக ஆடினர். தமிழ் தலைவாஸ் அணியினரும் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
    புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha
    பஞ்ச்குலா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் ‘ரைடு’ மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

    பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 ‘டை’ என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

    இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #TamilThalaivas #UPYoddha 
    ×