search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn cabinet"

    • மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
    • பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைைமச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது.

    இதில் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.

    தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.


    மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கு சம வாயப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில மகளிர் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கை மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    2001-ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

    • வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்.
    • வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதவிர, வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
    • விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

    இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டின் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்திற்கு கவர்னர் அழைக்கப்படுவதும், அவர் உரை நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது, சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என வரிசையாக பெரிய நிகழ்வுகள் வரவுள்ளன. இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற வேண்டியதுள்ளது.

    எனவே சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட் கூட்டத் தொடர் என தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசு நடத்த வேண்டிய நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ந்தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    • தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
    • புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    கலைஞர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. கவர்னர் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

    அமலாக்கத்துறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கோருவது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.

    • கவர்னரின் செயல்பாடுகள், அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    • அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என தமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
    • பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின.

    சென்னை:

    தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கட்சிகளுக்கான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணை என அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

    • முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பூண்டி கலைவாணன் எனது நண்பர்.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், "எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மிக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" என்றார்.

    அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.ஆர்.பாலு கூறுகையில், "பூண்டி கலைவாணன் எனது நண்பர். எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
    • தங்கம் தென்னரசுக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.

    அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார்.

    இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பால்வளத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார்.

    இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
    • கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

    2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

    இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

    2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.

    234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது என்பதால் யாரையாவது நீக்கினால்தான் புதிய மந்திரியை நியமிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

    இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    டி.ஆர்.பி.ராஜா தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச்செயலாளராக இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை இலாகா கிடைக்கும் என தெரிகிறது.

    சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அமைச்சர் பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி மாற்றப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமரசம் ஆகிவிட்டதால் அவரது இலாகாவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

    • அமைச்சர் துரைமுருகன், கவர்னரை சந்தித்து பேசப் போவதாக தகவல் வெளியானது.
    • அமைச்சராக டிஆர்பி ராஜா 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.

    இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு இலாகா மாற்றம் குறித்த தகவல் வெளியாகும்.

    ×