search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TENA Rank List"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு 2.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கு 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10968 இடங்கள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் 175 இடங்கள் உள்ளன.

    தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் பல சுற்றுகளாக நடக்க உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×