search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "survey"

    • பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
    • இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர்.

    மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த கற்கால புதை குழிகளை இறந்தவர்கள் உடல்களை புதைக்க பயன்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அதில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு புதை குழியிலும் அந்த காலத்தில் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன. பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.

    இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    இதன் மூலம் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்கள் இருந்திருக்க வேண்டும் என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதைகுழிகள் மூலம் ஜவ்வாது மலையில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர். 

    • கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த நிலப்பறவை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுப்பானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 25 பகுதிகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஒப்பிடுகையில் இந்த வருடம் கூடுதலாக 18 இன வகை பறவைகள் அதிகமாக கண்டறியப்பட்டன. அதாவது இந்த கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான நீல தலை பூங்குருவி, வடக்கு சிட்டு பருந்து, கதிர்குருவி, பிளைட் நெட்டைக்காலி, பெரிய அலகு கதிர் குருவி ஆகிய வலசை பறவைகள், புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கு கூடுதலாக வசித்து வருகிற பறவைகளில் நீண்ட அலகு நெட்டைக்காலி, சிறிய வல்லூறு, கேரள கொண்டைக்கழுகு, கருஞ்சிவப்பு வயிற்று கழுகு, மலை இருவாச்சி, பொன்முதுகு மரங்கொத்தி, மஞ்சள் கண் சிலம்பன், பருத்த அலகு கதிர்குருவி ஆகிய பறவைகளும் புதியதாக கண்டறியப்பட்டுள்ளன.

    இத்தகவலை மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    • கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
    • 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.

    சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.

    பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.

    நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.

    • அப்னா ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
    • 70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

    'அப்னா' என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட நிறுவன இந்திய முதலாளிகளிடம் விரிவான சர்வே ஒன்றை சமீபத்தில் நடத்தியது. 

    அதில் நிறுவன முதலாளிகள் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறார்கள், கம்பெனி ஊழியர்களின் சோர்வை தடுப்பதற்கான உத்திகள், வேலை நேரத்தில் ஊழியர்களிடம் ஏற்படும் கவனச்சிதறல்களை குறைத்து கவனத்தை மேம்படுத்தும் உத்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் கூறி இருப்பதாவது:-

    70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வழி ஆகும்.

    வருகைப்பதிவு மற்றும் நேரத்திற்கு அலுவலகத்திற்கு ஊழியர்கள் வருவதைக் காட்டிலும் நிறுவன அலுவலகங்களில் உகந்த சூழலை உருவாக்குதல்.

    கம்பெனி நலனுக்காக நன்றாக உழைக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி, பரிசுகள் கொடுத்தல். 

    ஊழியர்கள் ஊக்கமுடன் பணிபுரிய அவர்கள் பார்க்கும் வேலையை அங்கீகரித்தல்.

    ஊழியர்களுக்கு முதலாளிகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குதல். பணியாளர்களுக்கு ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்தல்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதி மொழிக் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், எம்.கே.மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்விற்குப் பின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவ மனையில் இருந்த உடல் மறுகூராய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பிரேதப் பரிசோதனை அறை கட்டித் தரரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையில் உள்ளது.

    இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது

    மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவுபெற்று உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    இதனைத் தொடர்ந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக் காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமாநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவா டானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் எந்தி ரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

    மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப் பட உள்ள வழித்தடங்களை யும் பார்வையிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகே சன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த அறிவுறுத்தல்
    • வருகிற 22-ந் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், பன்றிகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பருவமழைக்கு முன்பாகவும் அதன்பிறகும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு க்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக பிரத்யேக கருவிகளும் வழங்கப்பட்டன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது.

    அவர்கள் முதுமலை காப்பக பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு உயர்அதி காரிகள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவில் உள்மண்ட லம் அமைந்து உள்ளது. இங்கு தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்கள் இடம்பெற்று உள்ளன.

    மேற்கண்ட பகுதிகளில் தற்போது பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அவர்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 22-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • சிதம்பரம் மக்களவை தொகுதிவாக்கு எண்ணும் மையம் அமைய உள்ள இடத்தில் அரியலூர் கலெக்டர் ஆய்வு
    • தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.

    அரியலூர், 

    சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.

    இங்கு சிதம்பரம் மக்கள வைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங் கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில்மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கவுள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணப்படவுள்ள மையங்கள், தேர்தல்மேற் பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமையவுள்ள இடங்களையும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்ஏற்படுத்துவது குறித்தும் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உடையார்பா ளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், தேர்தல்பிரிவு வட்டாட்சியர் வேல்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசி, அக்கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி முதற் கட்டமாக தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு பணி நெல்லை மாநகராட்சி யில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

    கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மலக்கசடு கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல்,பொது சமுதாய நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்தல், கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு மற்றும் பரா மரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய தூய்மை பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுவார்கள்.

    கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நெல்லையில் நடை பெறும் தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளார்.

    கணக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளவேண் டும் என அவர் கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து அவர் 13-வது வார்டு அலுவல கத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். பின்னர் கணக்கெடுப்பு பணியா ளர்களுக்கு வுரை வழங்கி னார். தகுதி வாய்ந்த தூய்மை பணி யாளர்களை விடு படாமல் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
    • இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதே போல மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆய்வு

    அதன்படி ஓமலூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    9 கோடியே 55 லட்ச ரூபாய் வருமானம்

    இதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் சரகத்தில் ஓமலூர், மேட்டூர், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, தர்மபுரி என 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 60 ஆயிரத்து 462 இருசக்கர வாகனங்கள், 8 ஆயிரத்து 800 4 சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்களில் 4 ஆயிரத்து 268 இருசக்கர வாகனங்கள், 128 4 சக்கர வாகனங்கள் என போக்குவரத்து விதி மீறல்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 9 கோடியே 55 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    மேலும் சேலம் சரகத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த விபத்துகளில் 631 பேர் உயிரிழந்ததுடன் 4 ஆயிரத்து 118 பேர் காயமடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்குங்கள். விபத்துக்களை தவிர்த்திடுங்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆய் வுக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், கனமழை பெய்த வுடன் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் தூர்வார வேண்டும். நக ராட்சி பகுதியில் உள்ள 15 குளங்கள் மழை நீர் தேக்கி வைத்திடும் வகையில் கால் வாயை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார பணி களை மேற்கொள்ள வேண் டும் என ஆலோசனை வழங்கப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ×