search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supercar"

    • ஆடி Q8 இ-டிரான் மாடலில் 114 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஆடி Q8 இ-டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

    ஆடி Q8 இ-டிரான் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி இ-டிரான் மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும். புதிய Q8 இ-டிரான் மாடல் ஸ்டான்டர்டு எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் கூப் எஸ்யுவி என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது.

    பேஸ்லிப்ட் மாடல் என்ற வகையில் Q8 இ-டிரான் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில் சரவுன்ட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், மெஷ் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆடியின் புதிய மோனோக்ரோம் லோகோ வழங்கப்பட்டு உள்ளது. கிரில் பகுதியின் மேல்புறத்தில் லைட் பார் உள்ளது. இந்த காரின் முன்புற பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு, சற்றே அளவில் பெரிய ஏர் இன்டேக்குகளை கொண்டிருக்கிறது.

    ஆடி Q8 இ-டிரான் மாடலில் 114 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒருங்கிணைந்து 408 ஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    புதிய Q8 இ-டிரான் மாடலுடன் 22 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. புதிய Q8 இ-டிரான் மாடல் அதிகபட்சம் 170 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும்.

    ஆடி Q8 இ-டிரான் மற்றும் Q8 இ-டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் ஜாகுவார் ஐ-பேஸ் மாடலுக்கு போட்டியாக அமைகின்றன. இந்திய சந்தையில் புதிய Q8 இ-டிரான் மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய Revuelto ஹைப்ரிட் சூப்பர் கார் 1015 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.
    • புதிய சூப்பர் காரில் அவெண்டெடார் மாடலில் உள்ளதை விட மேம்பட்ட 6.5L L545 V12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி நிறுவனம் முற்றிலும் புதிய ஹைப்ரிட் சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. அவெண்டெடார் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சூப்பர்கார் Revuelto என அழைக்கப்படுகிறது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட லம்போர்கினி சூப்பர் கார் மாடலாக புதிய Revuelto ஹைப்ரிட் உள்ளது.

    புதிய Revuelto ஹைப்ரிட் மாடலில் 6.5L L545 V12 எஞ்சினின் மேம்பட்ட வெர்ஷன் உள்ளது. இந்த எஞ்சின் 825 பிஎஸ் பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுவரை லம்போர்கினி வழங்கியதில் சக்திவாய்ந்த V12 எஞ்சின் இது ஆகும். இதில் உள்ள V12 எஞ்சின் பின்புற வீல்களை மட்டுமே இயக்கும். முன்புற வீல்களுக்கான திறனை இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்குகின்றன.

     

    டிசைனை பொருத்தவரை புதிய சூப்பர்காரின் முன்புறம் Y வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், டெயில் லேம்ப் கிராஃபிக்ஸ், பாடி லைன்கள், Y வடிவ வீல்கள், சிசர் டோர்கள், ஆக்டிவ் ரியர் விங், அதிகளவு டவுன்ஃபோர்ஸ் ஏற்படுத்தும் ரியர் டிஃப்யசர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    உள்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 8.4 இன்ச் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், U வடிவ ரிவர்ஸ் லீவர், 13 டிரைவிங் மோட், இரண்டு சுழலும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களின் ஒருங்கிணைந்த செய்லதிறன் 1015 பிஎஸ் ஆகும். இதை கொண்டு காரில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிட முடியும். மேலும் ஏழு நொடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    • லம்போர்கினி நிறுவனத்தின் புது சூப்பர்கார் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • புது லம்போர்கினி கார் மற்றொரு ஹரகேன் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தியாளரான லம்போர்கினி சமீபத்தில் தான் ஹரகேன் டெக்னிகா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த கார் அறிமுக நிகழ்விலேயே லம்போர்கினி நிறுவனம் டிசம்பர் மாத வாக்கில் மற்றொரு புது மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து விட்டது. மேலும் இந்த காருக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருந்தது. இது மற்றொரு ஹரகேன் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய லம்போர்கினி கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹரகேன் டெக்னிகா வெளிப்படுத்தும் செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹரகேன் டெக்னிகா மாடல் ஹரகேன் இவோ RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், கார்பன் பைபர் என்ஜின் கவர், பிக்சட் ரியர் ஸ்பாயிலர், ஸ்போர்டி ரியர் பம்ப்பர், ஹெக்சகன் வடிவ டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் ஆல் பிளாக் தீம் கொண்டுள்ளது. கூடுதலாக ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் மேம்பட்ட HMI இண்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. லம்போர்கினி ஹூரகேன் டெக்னிகா மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த கார் ஸ்டிராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேக்ததை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • பெராரி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 296 GTB சூப்பர்காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த சூப்பர்கார் பெராரி F8 ட்ரிபுடோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    2022 பெராரி 296 GTB இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெராரி காரின் விலை ரூ. 5 கோடியே 40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பெராரி F8 ட்ரிபுடோ காரின் மேம்பட்ட மாடல் ஆகும்.


    புதிய பெராரி 296 GTB மாடலில் 3.0 லிட்டர், வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 645 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும். இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் உள்ளது. இது 164 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒருங்கிணைந்து 809 ஹெச்பி பவர், 741 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸ்மிஷனுக்கு 8 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 7.45 கிலோவாட் ஹவர் பேட்டரி, பியுர் எலெக்ட்ரிக் மோடில் காரை 25 கிலோமீட்டர் வரை பயணிக்க செய்யும், இந்த காரில் டியர்டிராப் வடிவ ஹெட்லைட்கள், அகலமான ஏர் டேம், டோர் மவுண்ட் செய்யப்பட்ட ORVMகள், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • லம்போர்கினி நிறுவனம் புதிய ஹரகேன் டெக்னிகா மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
    • இந்த கார் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான லம்போர்கினி இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வி10 சூப்பர்காரின் புது வேரியண்ட் ஹரகேன் RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்துப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புது லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த RWD வேரியண்ட் ஆகும்.


     இதில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

    இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், ரி-வொர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், கார்பன் பைபர் என்ஜின் கவர், டிப்யுசர் அடங்கிய புது ரியர் பம்ப்பர், ரியர் ஸ்பாயிலர், ஹெக்சகன் வடிவம் கொண்ட டூயல் எக்சாஸ்ட் பைப்கள் உள்ளன.

    ×