search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer holiday"

    • தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம் - தன்பாத் மற்றும் ஈரோடு - தன்பாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாரந்திர சிறப்பு ரெயில் (06065) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06066) மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து வரும் 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06064) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 2 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா ஆகிய வழித்தடத்தில் செல்லும்.

    அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.
    • கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.

    மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

    அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரத்தில் யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.

    அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.

    தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

    ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.

    • ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சென்னை :

    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கினாலும், திட்டமிட்டபடி பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதியுடனும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி ஆரம்பித்து, 20-ந்தேதியுடனும் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.

    ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இறுதித்தேர்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறையும் விடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்வித்துறையின் நாட்காட்டியின்படி, இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் ஆகும்.

    அந்த வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இன்று ஆண்டு இறுதித்தேர்வின் கடைசித்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

    கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அப்போது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்த அறிவிப்பை கல்வித்துறை முடிவு செய்து வெளியிடும் என்று பேசப்படுகிறது.

    • ரெயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறையை முன்னிட்டு ெரயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு :- ஜூன் 27 வரை (செவ்வாய்தோறும்) சென்னை தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரெயில் (06031). மறுமார்க்கமாக ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) மங்களூரு - சென்னை தாம்பரம் சிறப்பு ரெயில், மே 3 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ெரயில் (06044) மே 4 முதல் ஜூன் 29 வரை (வியாழன் தோறும்) சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட 2 ரெயில்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரெயில் ஜூன் 27 வரை செவ்வாய்கிழமைகளில் இயங்கும். மறுமார்க்கமாக புதன்தோறும் பெங்களூரு - கொச்சுவேலி ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயங்கும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    கோவை - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட ரெயிலில் துாத்துக்குடிக்கென இரு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் பெட்டிகள் தனியே கழற்றப்பட்டு, தூத்துக்குடிக்கு வேறு என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக, ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்ட போது இச்சேவையும் திரும்ப பெறப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு ரெயில் இல்லை. கோவை, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டுமெனில் ஈரோடு சென்று அங்கிருந்து வேறு ரெயிலில் செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கோடை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி ரெயில் இயக்கம் இல்லாததால், ஈரோடு சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. ஈரோடு வழியாக இயக்கப்படும் தினசரி ரெயில் மைசூரில் இருந்து வருவதால், எப்போதும் கூட்டமாக உள்ளது. முன்பதிவில் இடம் கிடைப்பதில்லை. எனவே பயணிகள் வசதிக்காக, கோவை - தூத்துக்குடி இடையே கோடை சிறப்பு ெரயில் அறிவிக்க வேண்டும் என்றனர்.

    அரசு விரைவு பஸ்களுக்கு தனியார் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட வசதி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சொந்த ஊர்களுக்கும், வெளியூர் சுற்றுலா தலங்களுக்கும் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்தனர்.

    அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது வார இறுதி நாட்களில் 22 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    கோடை விடுமுறை காரணமாக அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிகை உயர்ந்துள்ளது. வெளியூர் சுற்றுலா தலங்களுக்கு 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வார இறுதி நாட்களில் 1000 பஸ்களுக்கு 22 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர்.

    மற்ற நாட்களில் 800 பஸ்களுக்கு 18,20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் குளிர்சாதன வசதி பேருந்துகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் அரசு விரைவு பஸ்களுக்கு தனியார் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட வசதி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

    அதனால் டிக்கெட் கட்டணம் அதிகமாவதால் அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. தனியார் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்ய இயலாது.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துகாணப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து அலைமோதுகிறது.

    நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 78,630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 32,158 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் மையத்தில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ரூ.2 கோடியே 86 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. #TirupatiTemple
    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

    நேற்றுடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

    காலை 6 மணி முதல் பூம்புகார் படகுத்துறை முன்பு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் காத்து நின்று சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறைக்கு 3 படகுகள் இயக்கப்பட்டது. கடலில் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல், விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்தவாறு சென்றனர். இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


    பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு இன்றுடன் முடிவடைந்ததால், மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர். #SummerHoliday
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 18-ந் தேதி நடைபெறுவதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறைவடைந்தன.

    அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் ஆண்டு இறுதி தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

    ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதிக்குள் இறுதி தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்படுகின்றன.

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மாலை வரை செயல்படுகின்றன. நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதேபோல 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளை வரை தேர்வு நடைபெறுகிறது.

    இதுதவிர சி.பி.எஸ்.இ. பெரும்பாலான பள்ளிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஒருசில பள்ளிகள் 16-ந் தேதி வரை செயல்படுகிறது. அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனால் தனியார் பள்ளிகள் கூட 16-ந் தேதிக்கு செயல்படாது.

    தேர்தல் வந்ததால் முன் கூட்டியே மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய விடுமுறையை விட இந்த வருடம் அதிகமாக கிடைத்துள்ளது.

    எப்போதும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர்.

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதை மீறி நடத்தும் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SummerHoliday

    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SummerHoliday
    சென்னை:

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன.

    கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும்.

    எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SummerHoliday
    ×