என் மலர்

  நீங்கள் தேடியது "suicide attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்க வைத்தனர்.
  • தற்கொலை தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

  பெஷாவர்:

  பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

  பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 2 பேர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

  தெஹ்ரீக்-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டபோதிலும், பழங்குடியின மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
  • நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

  புதுடெல்லி :

  ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  அந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

  அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இது தொடபாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரான் நாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
  டெஹ்ரான்:

  இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.
   
  இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் பணியில் ஈரான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடந்த புதன்கிழமை இப்பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

  இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதர் ரபட் மசவ்ட்-க்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

  எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ரம் கசேமி வலியுறுத்தியுள்ளார். #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதியில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். #suicideattack #Kabulsuicideattack
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனங்கள் மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.  

  காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #suicideattack #Kabulsuicideattack 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Kabulsuicideattack #Kabulattack
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அருகில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலில் அங்கிருந்த 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

  தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  பிரிட்டன் பாதுக்காப்பு நிறுவனம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

  இந்த நிறுவனம், காபுலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #Kabulsuicideattack #Kabulattack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மத்திய சிறைச்சாலையின் அருகே அரசு பணியாளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். #KabulSuicideattack #sevendead
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள புல்-இ-சர்க்கி மத்திய சிறைச்சாலையில் பணியாற்றுபவர்கள் இன்று ஒரு பேருந்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது, அந்த பேருந்தை குறிவைத்து உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #KabulSuicideattack  #sevendead
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #SuicideAttack #Afghanistan #ElectionWorker
  காபூல்:

  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது.

  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33 மாகாணங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி பலியானார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர், 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

  இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்த தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

  பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #SuicideAttack #Afghanistan #ElectionWorker
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் உள்பட 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். #Afghanistan #SuicideAttack #Taliban
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

  அந்த பேருந்து குடிடிருப்பு வாசல் அருகே வந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரம்பிய கார் மூலம் பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 அதிகாரிகள், 3 ஊழியர்கள் என மொத்தம் 5 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.  தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சில்ர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்தனர்.

  போலீசார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #Afghanistan #SuicideAttack #Taliban
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். #Afghanelectionrally #suicideattack
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
   
  இதற்கிடையே, ஆப்கன் நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

  இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பினர் அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு நாங்களே காரணம் என தெரிவித்துள்ளனர். #AfghanElectionRally #SuicideAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானின் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #KabulSuicideAttack
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

  இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

  தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

  இந்நிலையில்,  தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabulSuicideAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack
  பாக்தாத்:

  ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print