என் மலர்

  நீங்கள் தேடியது "st anthony"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது.
  • ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

  மயிலாடுதுறை கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடந்தது. முன்னதாக, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்கு தந்தை சவரிநாதன் அடிகளார், எருக்கூர் பங்கு தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார், குத்தாலம் பங்கு தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினர்.

  தொடர்ந்து திவ்ய நற்கருணை பவனி நடந்தது. இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ் பவனியை வழிநடத்தினார். பின்னர் ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது. மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் அடிகளார் மறையுரையாற்றினார். புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மேற்கொண்டார்.

  மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ் அடிகளார் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

  மந்தாரக்குப்பம் அருகே ரோமாபுரியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் 12-ம் ஆண்டு பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி டவுன்ஷிப் புனித பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், புதுக்கோட்டை ரெஜிஸ், கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டு பெருவிழாவுக்கான கூட்டு திருப்பலி நடந்தது.

  அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் நெய்வேலி பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அருட் சகோதரிகள், வேதியர்கள், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
  • இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

  கீழ்வேளூர் அருகே கோகூரில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழா நாட்களில் தினமும் ஜெபம், வழிபாடு, திருப்பலி, மரையுறை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சம்மனசு, மாதா, அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர்.

  இதை தொடர்ந்து தமிழக ஆயர் பேரவை துணை செயலர் சகாயராஜ், ஆலய பங்குதந்தை ஜான்பீட்டர் ஆகியோர் தலைமையில் நவநாள், ஜெபம், சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தது.

  பின்னர் ஆலய வளாகத்தில் இருந்து பெரிய தேர்பவனி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது.
  • புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

  சின்னசேலம் :

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

  இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பங்குதந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மறை மாவட்ட அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலி, புதுசிறப்பு பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் வழிபாடு தினந்தோறும் நடைபெற்று வந்தது.

  மேலும் மாலை நேரத்தில் முக்கிய தெருக்கள் வழியாக புனித அந்தோணியார் சொரூபம் பவனியாக வந்தது.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவளி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு ஆண்டு பெருவிழா திருப்பலியை புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டம் பேராயர் பிரான்சிஸ் நடத்தி வைத்தார்.

  இதையடுத்து இரவு 11 மணிக்கு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 5 ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆடம்பர தேர்பவனி அதற்கு முன்பாக புனித சூசையப்பர் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேர்கள் பவனியாக சென்றது.

  அப்போது புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன. ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. இதில் சின்னசேலம் பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மத வேறுபாடுகள் இன்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 11-ந்தேதி ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது.
  • 12-ந்தேதி வேண்டுதல் தேர், கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது.

  திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் உள்ள பூமலூர் புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

  இந்த விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் லாஷ் தலைமை தாங்கினார். பங்கு குருவுடன் இணைந்து குழந்தைசாமி,அருண்,ஸ்டீபன் (ஆக்ரா) ,ஹென்றி டேனியல்,பிலிப், க்ளாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நடந்தது.

  மேலும் வருகிற 11-ந்தேதி ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது. பின்னர் வருகிற 12-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழா நாட்களில் தினமும் நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
  • கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

  நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

  விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய மின் அலங்கார தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னாள் மிக்கேல் ஆண்டவர், சவேரியார், அருளானந்தர், மாதா, புனித அந்தோணியார் ஆகிய சொரூபங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளி பவனி நடைபெற்றது. அப்போது வண்ண, வண்ண வாணவேடிக்கை நடந்தது. இதில் கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, கிறிஸ்தவ சமூக தலைவர் பிராண்சிஸ், துணைத்தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் திரளாள கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது.
  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கடந்த 15-ந்தேதி திருமானூர் பங்குதந்தை பெல்லார்மின் தலைமையில் நடைபெற்றது.

  18-ந்தேதி இரவு 7மணிக்கு புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமானூர் அருளானந்த திருக்கோவில் பங்குதந்தை பெல்லார்மின், இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப் ராஜ், கோக்குடி பங்குதந்தை சந்தியாகு, கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த், புனவாசல் பங்கு தந்தை மைக்கேல்ராஜ், ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

  இதையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது. காரைப் பாக்கம் கிராமம் மற்றும் மஞ்ச மேடு கிராமங்களில் பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தேர் பவனியில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் கிராம தலை வர்கள், இளைஞர்கள், பங்குதந்தை பெல்லார்மின் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கம் நடைபெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனி நடைபெற உள்ளது.
  பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த திருவிழா நடந்து வருகிறது.

  வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
  சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நேற்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரை ஆற்றினார்.

  28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

  2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

  5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.

  விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரை ஆற்றுகிறார்.

  28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

  2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

  5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.

  விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
  மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆடம்பர பவனியும், 4-ந் தேதி மாலை 6 மணியளவில் தேர் பவனியும் நடக்கிறது. ஆண்டு விழா பெருவிழா 5-ந் தேதி நடக்கிறது.

  விழாவையொட்டி நடைபெறும் சிறப்பு திருப்பலிகளை மேதகு ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னாண்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியருக்கு உகந்த ஜெபத்தை இங்கு பார்க்கலாம்.
  புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே!

  கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

  மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!

  எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.

  நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?

  தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.

  எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.

  - ஆமென்.