search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart Watch"

    • அதிகாரி ஒருவரின் உயிரை ‘ஸ்மார்ட் வாட்ச்’ காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
    • நிலைகுலைந்தவர் தனது கையில் கட்டியிருந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.

    இன்றைய காலத்தில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறுமனே நேரம் பார்ப்பதற்காக மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து 'அலார்ட்' செய்யும் உயிர்காக்கும் கருவியாகவும் 'ஸ்மார்ட் வாட்ச்' செயல்படுகிறது.

    அந்த வகையில் அதிகாரி ஒருவரின் உயிரை 'ஸ்மார்ட் வாட்ச்' காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பால்வபாம். இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்லும் இவர் சம்பவத்தன்று நடைபயிற்சி சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் தனது கையில் கட்டியிருந்த 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.

    உடனடியாக விரைந்து சென்ற அவர், கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது இதயத்துக்கான ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தனது 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் உயிர் பிழைத்ததாக பால்வபாம் கூறி உள்ளார்.

    • ‘ஸ்மார்ட் வாட்ச்'கள் ‘போர்ட்டபிள் மீடியா பிளேயர்’களாக செயல்படுகின்றன.
    • எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன.

    புதுக்கோட்டை:

    ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின்போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:-

    தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன.

    எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிறபோது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாம்சங் நிறுவனம் இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. #GalaxyWatchActive



    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் முன்பை விட ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    மேம்பட்ட கேலக்ஸி ஹெரிடேஜ், ஃபிட்னஸ் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்களை கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இரத்த கொதிப்பை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதற்கென பயனர்கள் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த செயலியை மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.  

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் பயனர் ஓடுவது, நடப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தானாக கண்டறிந்து அதற்கேற்ற விவரங்களை வழங்கும். இந்த வாட்ச் அணிந்தபடி 39 பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் அன்றாட முன்னேற்றத்திற்கு இலக்கு நிர்ணயித்து, அதனை கண்காணிக்கவும் முடியும். 



    1.1 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் கலர் AOD டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 25 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் எக்சைனோஸ் 9110 பிராசஸர், 768 எம்.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. 

    இத்துடன் 5ATM+ IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் MIL-STD-810G சான்று பெற்றிருப்பதால் ராணுவ தரத்திற்கு இணையான உறுதித்தன்மையை கொண்டிருக்கிறது. இதில் டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0 வழங்கப்பட்டிருக்கிறது.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் 4.2, வைபை, 230 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும். இத்துடன் மூன்றாம் தரப்பு செயலிகளை சப்போர்ட் செய்யும். 

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 7 ஆம் தேதி துவங்குகிறது. இதனை வாங்குவோருக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch


     
    ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. எனினும், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்படாமல் இருந்தது. 

    தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் இ.சி.ஜி. வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் விற்பனை மைய பயிற்சி அறிக்கைகளில், வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் ஆப்பிள் வடிவமைத்த இ.சி.ஜி. ஆப் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் இதய துடிப்பை டிராக் செய்து, இதய ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை வழங்கும்.



    இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் தங்களது புதிய ஆப்பிள் வாட்ச் டிஜிட்டல் கிரவுனை தொட்டு இ.சி.ஜி. சென்சாரை ஆக்டிவேட் செய்யலாம். இனி உங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கை 30 நொடிகளில் உங்களின் திரையில் தெரியும். இதோடு வாட்ச் பயனரின் இதய துடிப்பை சீரான இடைவெளியில் தானாக டிராக் செய்து கொண்டிருக்கும்.

    பயனரின் ஆரோக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. பயனர்கள் தங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களுடன் பி.டி.எஃப். வடிவில் பகிர்ந்து கொள்ள முடியும்.

    வாட்ச் ஓ.எஸ். 5.1.2 இயங்குதளம் தற்சமயம் பீட்டா முறையில் சோதனை செய்யப்படுகிறது. அனைவருக்கும் வழங்கப்படும் போது, பயனர்கள் இ.சி.ஜி. பரிசோதனையை தாங்களாகவே செய்து கொள்ளலாம். ஆப்பிள் புதிய அப்டேட் எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. #AppleWatch 
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள், அவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகி இருக்கிறது.

    ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.  

    புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.



    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.28,686) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி முதல்  செய்யப்பட்டு விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பழைய ஆப்பிள் வாட்ச் 3 விலை 279 டாலர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleWatch4
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது. #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.

    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. 

    நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.

    இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது. 

    அழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.  



    ஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:

    - 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

    - நானோ சிம் ஸ்லாட் வசதி

    - மைக்ரோ SD கார்டு ஸ்லாட்

    - BT வயர்லெஸ் வசதி

    - தொடு திரை வசதி

    - இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது

    - பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்

    - முன்பக்க கேமரா

    ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

    இத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
     
    இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
    ×