search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siva Shankar Baba"

    • சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக காவல்துறை தரப்பில் வாதம்
    • பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாக நீதிமன்றம் கருத்து

    சென்னை:

    சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சிவசங்கர் பாபா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இன்றைய விசாரணையின்போது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கை சட்டப்படி தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலதாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று கூறியதுடன், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பாலியல் தொல்லை தீவிரமான குற்றமாக இருந்தாலும்கூட பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாகவும், இதற்கு வெறும் அச்சம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். செல்வாக்கான நபர்களின் சட்டவிரோத செயல்கள் ஒருநாள் வெளியில் வரும்போது அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன்வருவது இயல்பு, அதேபோல்தான் இந்த வழக்கிலும் தாமதமாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    • நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார்.
    • சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி அடுத்த மாதம் 15-ந்தேதி சிவசங்கர் பாபாவை ஆஜராக உத்தரவிட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சாமியார் சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ 2 பெண் வன்கொடுமை உள்ளிட்ட 8 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த 8 வழக்குகளிலும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கின் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி அடுத்த மாதம் 15-ந்தேதி சிவசங்கர் பாபாவை ஆஜராக உத்தரவிட்டார்.

    பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது 4 போக்சோ வழக்குகளும், பெண்கள் வன்கொடுமை வழக்கு ஒன்றும் உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவசங்கர் பாபா பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருந்தது. அதை திறந்து இதுவரை போலீசார் சோதனை நடத்தாமல் இருந்தனர்.

    சிவசங்கர் பாபா கைரேகை மூலமாகவே திறக்கக் கூடியதாக இருந்த அந்த அறையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அழைத்து சென்று திறந்துள்ளனர்.

    அந்த அறையில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதனை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் சிவசங்கர் பாபா வழக்கில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முதலில் தமிழ்நாடு போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி கைது செய்தனர்.

    சிறை


    தற்போது சிவசங்கர் பாபா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தொடர்ந்து அவர் சிறையிலேயே உள்ளார்.

    இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் அறையில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    ×