search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SelvaPerunthagai MLA"

    • ராகுல்காந்தி நடைபயண விளக்க பொதுக்கூட்டம் கோவை பூசாரி பாளையத்தில் நடைபெற்றது.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி.

    கோவை

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் 74-வது டிவிசன் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் மற்றும் ராகுல்காந்தி நடைபயண விளக்க பொதுக்கூட்டம் கோவை பூசாரி பாளையத்தில் நடைபெற்றது.

    74-வது வார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, சங்கனூர் ஸ்ரீதர், ஆர்.கணேசன், ஆர்.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சி குழு தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்.

    கூட்டத்தில் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.பேசியதாவது:-

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்றது? இன்று மோடி ஆட்சியில் என்ன விலைக்கு விற்கிறது? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று மோடி கூறினார். ஆனால் இன்று என்ன நடக்கிறது? மோடியின் வாக்குறுதி என்னாச்சு? 8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று சொன்னதும் இதே மோடி தான். ஆனால் இன்று 8 பேர் வேலைவாய்ப்பு இழந்து தெருவில் நிற்கின்றனர். இதுதான் மோடி ஆட்சியின் சாதனை.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி. இதன்மூலம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பச்சை மையில் கைெயழுத்து போடும் அதிகாரம் வழங்கினார். நகர்பாலிகா சட்டம் கொண்டு வந்தவரும், பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தவரும் ராஜீவ்காந்திதான்.

    இதே காங்கிரஸ் ஆட்சியின் போது, சோனியாகாந்தி வழிகாட்டுதலுடன், பிரதமர் மன்மோகன் சிங் கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். கிராம மக்களின் வறுமை நீங்கியது. அவர்களது வாழ்வு மேம்பட்டது. ஆனால் இன்று பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் 32 சதவீதம் மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள்.

    இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நம் இளம் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு பாதையாத்திரை வரும் 7-ந் தேதி முதல் தொடங்குகிறார்.

    இந்த பாத யாத்திரை மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு அமையும். இதற்கு நாம் அனைவரும் சூளுரைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீனஸ் மணி, தமிழ்செல்வன், கோவை போஸ், ராஜாமணி, இருகூர் சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரளா வசந்த், காந்தகுமார், கோவை போஸ், அரிமா ஆறுமுகம், கணபதி சிவக்குமார், உமா மகேஸ்வரி, திலகவதி, டென்னிஸ் செல்வராஜ், வடவள்ளி காந்தி, 74-வது வார்டு நிர்வாகிகள் சண்முகராஜன், துரை, காந்திதாசன், கண்ணன் ரங்கராஜ், பிரபு, நந்தகோபால், ஜெய்கணேஷ், வசந்தி, விஜயன், ஈஸ்வரன், செல்வராஜ், சேகர், ராஜசேகர், ஜெயபிரகாஷ், குப்புராஜ், சுப்பிரமணி, ராேஜந்திரன், பிரவீன், பிரபு, தியாகு, சற்குணம் உள்படபலர் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
    • கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வுமான செல்வபெருந்தகை தலைமையில் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், கார்த்திகேயன், சிந்தனை செல்வன், வேல்முருகன் மற்றும் சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் பால சீனிவாசன், சிறப்பு அதிகாரி ராஜா, சட்டமன்ற பேரவை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வரவேற்றார்.

    இந்த குழுவினர் இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டனர். அதன் பிறகு அங்கு இருந்து மணவாளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ. நிறுவனத்துக்கு சொந்தமான அபூர்வ மணல் ஆலையை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து குளச்சல் மீன்பிடி துறைமுகம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர். மாலை 3 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கலெக்டர் மற்றும் உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு நெல்லை புறப்பட்டு செல்கின்றனர்.

    ×