search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Self-employment"

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
    • கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகம் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசின் சுயவேலைவாய்ப்பிற்கான கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 11-ந் தேதி தாராபுரம் , 14-ந் தேதி பல்லடம், 15-ந் தேதி உடுமலைப்பேட்டை, 16-ந் தேதி பொங்கலூர், 19-ந் தேதி அவிநாசி, 21-ந் தேதி மடத்துக்குளம், 23-ந் தேதி, வெள்ளகோவில், 24-ந் தேதி குண்டடம், 25-ந் தேதி காங்கேயம், 28-ந் தேதி ஊத்துக்குளி, 29-ந் தேதி மூலனூர், 30-ந் தேதி குடிமங்கலம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோர் ஆதார் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தகப் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

    திருப்பூர் :

    வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடபாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 68 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதனம் மானியம் வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் அமைக்க வேண்டும். பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு தனியார் நிறுவனங்களில் பணிகளில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும்.

    தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையை கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற 25-ந் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களையும் அல்லது வேளாண் துணை இயக்குனரை 94875 61146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

    அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தில் வருகிற ஜூலை 6-ந் தேதி காலை 10 மணியளவில் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்நடை பெறவுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது

    ×