search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Score"

    • பிளஸ்-2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
    • லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    அதன்படி இந்த பள்ளியில் படித்த மாணவி லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார். மாணவி அல் அப்ரா 575 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், நுபிரா பாத்திமா 573 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    அதற்கு அடுத்து மாணவி ருஷ்தா பாத்திமா 572 மதிப்பெண்ணும், ஹதீஜா பாத்திமா 571 மதிப்பெண்ணும், பாத்திமா பரா, ஐனுல் ஹீதா 571 மதிப்ெபண்கள் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் 9 மாணவிகள் கணக்கு பதிவியல், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் 20 மாணவிகள் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

    அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹீம், முதல்வர் நேபிள் ஜெஸ்டஸ், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.

    • காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

    காரைக்குடி

    மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

    • அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.
    • காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தாள்-1, தாள்-2, தாள்-3 மற்றும் நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களை மத்திய அமைச்சகங்களில் உள்ள பதவிகளில் பணி அமர்த்தி வருகிறது.

    அந்த வகையில், உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2022 அறிவிப்பு கடந்த ஆண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து தாள்-1 தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதிப்பெண் விபரங்களை தேர்வர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்வர்கள் தாங்கள் எழுதிய தாள்-1-ல் எடுத்த மதிப்பெண்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து தங்களின் இந்த தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த வசதி 27.02.2023 இரவு 8 மணி முதல் 13.03.2023 காலை 8 வரை மட்டுமே இருக்கும். மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    இந்த தகவலை இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்.
    • 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் திருவாரூர் வ.சோ.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா மற்றும் திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.

    இதில் 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் ஒருங்கிணைப்பாளர்களாக மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ச.ஜயராமன், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் என்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரிய ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • முதுகலை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
    • இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிமாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு ரூ 4000, இளங்களை கல்விபயிலும் மாணவமாணவியருக்கு ரூ 6000 மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

    பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000 வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் 5000 கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்தி றனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைமற்றும் பார்வைற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

    1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத்தி றனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

    9 வகுப்பு மேல்க ல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகள்கல்வி உதவித்தொகை பெற 30.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர்உ தவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில்க ல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண்சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இதுசம்பந்தமா னவிவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடா;பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
    • ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதமாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றம் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் நடைபெறும் .

    இத்தேர்வானது வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சென்னை நகரிலும் நடைபெறவிருக்கிறது.

    இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக நடைபெற உள்ளது.

    எழுத்துத்தேரவு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது.

    கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை தனித்தன்மை போன்ற வற்றை ஆராய்வதாக இருக்கும்.

    எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 என்ற முகவரிக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டெல் பவன். டேராடூன் (வங்கி குறியடு 01576) உத்தரகாண்ட் செலுத்ததக்க பொதுப்பிரிவினர் ரூபாய் 600- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555- க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

    இணையவழி மூலமாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழியான www. rimc.gov.in செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு ஆகியவை விரைவு அஞ்சல் வாயிலாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன் உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248 003 –லிருந்து அனுப்பப்படும்.

    விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2023 அன்று பதினொன்றை வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    அதாவது அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

    மேலும் 01.07.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டடுப்பாட்டு அலுவலக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய சாலை பூங்கா நகர் சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் இஸ்லாமியா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
    • மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    கீழக்கரை

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. அதேபோல 10-ம் வகுப்பு ேதர்வில் 94.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவி அல்மாசா 600-க்கு 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.

    இவர் 3 பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். 2-வது இடத்தை மகினா ரிம் 586 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை பாத்திமா ருபைனா 575 மதிப்பெண்ணும், 4-வது இடத்தை ஆயிஷா லுபினா 574 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் 19 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 20 பேர் 550க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி அல்மாசாவிற்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் ஊக்கத்தொகையாக பள்ளி சார்பில் ரூ.10 ஆயிரம், மேலத்தெரு தொழிலதிபர் சிராஜ் சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ராஜா தட்சணா 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். 2-வது இடத்தை மாணவர் மனோஜ் 473 மதிப்பெண்ணும், 3-வது இடத்தை மாணவர் முகம்மது இர்பான் 462 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    22 மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×