search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankarankovil"

    • நிகழ்ச்சியில் சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
    • தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுமார் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் முன்னிலை வகித்தார். இதில் குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். அணியில் இருந்து மூர்த்தி, சரண், செல்வம், கார்த்தி, ராசு, முத்துராஜ், ராஜா, மணிகண்டன் இசக்கி பாண்டியன், வெள்ளத்துரை, ஜெயக்கொடி, கிருஷ்ணசாமி, சங்கர பாண்டியன், கார்த்தி, பிரகாஷ், சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க.வில் இணைந்து உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தி.மு.க.வில் கட்சி பணிகளில் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜராஜன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய மக்காத தன்மை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உள்ளூர் வெடி மருந்து தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் வெடி வெடிக்கும்படியும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பேக்கரி, பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களுக்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புகையில்லாத மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாமினை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கோமதி அம்பாள் மெட்ரிக்பள்ளி, பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரவீன் ஒற்றைக்கம்பு வீச்சில் முதலிடமும், அசோக் பாண்டியன் கம்பு சண்டையில் 2-ம் இடமும், சந்தோஷ், கிஷோர்சூர்யா, கம்பு சண்டையில் 3-ம் இடமும், இளையோர் பிரிவில் அஜய் கம்பு சண்டையில் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் இளையோர் பிரிவில் ரக்சனா, கம்பு சண்டையில் 2-ம் இடமும், சுபயாழினி, தாருண்யா கம்பு சண்டையில் 3-ம் இடமும், மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர். அபிநயா இரட்டை கம்பு வீச்சில் 3-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் அனுஸ்ரீ கம்பு சண்டையில் 2-ம் இடமும் மலர்தர்ஷினி, பிரியதர்ஷினி, கம்பு சண்டையில் 3-ம் இடமும் தனுஸ்ரீ இரட்டைக் கம்பு வீச்சில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியாகிய பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர், ஆசிரியர் - ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
    • இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கிப்ட்சன் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    அதனை கேட்டுக் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தகவல் தொழில் நுட்ப அணி செயல்பாட்டிற்கு வடக்கு மாவட்ட கழகம் என்றும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சிவாஜி, ரெஜிகலா, வாசு தேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர்கள் சுவாமி நாதன், ரஜினி காந்த், சங்கரேஸ்வரி, சங்கரன் கோவில் சட்ட மன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்பாண்டியன், வீமராஜ், சங்கரேஸ்வரி, நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கணேஷ், சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
    • நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், பரமகுரு, மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வர்த்தக அணி இணை செய லாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலா ளர்கள் ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றார். மருத்துவ அணி மாவட்ட அமைப்பா ளர் டாக்டர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்திய குடியரசு தலைவ ருக்கு அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளார்.

    அதன்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி மட்டுமல்லாமல் அனைத்து சார்பு அணிகளும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை புரட்சி இயக்கமாக மாற்றி தென்காசி வடக்கு மாவட்டத் தில் இருந்து அதிகமான அளவில் கையெழுத்துக் களை பெற்று அனுப்ப வேண்டும்.

    நீட் தேர்வு என்பது திராவிட கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நோய். இதனால் ஏழை, எளிய மக்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் அதிக அளவு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி.

    ஆனால் தமிழக மாண வர்கள் மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்காமல் இந்த நீட் தேர்வினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து பரப்பரை யாளர் சுந்தரவள்ளி கருத்துரை வழங்கினார். தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலிலும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, பேரூர் செயலா ளர்கள், நகராட்சி சேர்மன் கள் சங்கரன் கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தர ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்புடாதி, வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட சார்பு அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், சரவணன், சதிஷ், முத்துலட்சுமி, விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், சுற்றுச் சூழல் அணி துணை அமைப் பாளர் சிவகிரி சேதுசுப்ர மணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் முருக ராஜ், ஜெயகுமார், ஜான், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
    • சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார். மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்.

    தென்காசி மாவட்டம் உதயமானது அ.தி.மு.க. ஆட்சியில். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முடிவடைந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சில திட்டங்களை தி.மு.க. கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

    மக்கள் ஏமாற்றம்

    சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அரசு கலை கல்லூரி, ஆட்டின ஆராய்ச்சி மையம், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், ரூ. 543 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டனர். மக்களை ஏமாற்றியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. அனைத்து குடும்பத் தலைவி க்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றார்கள். இதனை தி.மு.க.வினரை பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றனர்.

    40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடிந்ததா?. தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம். மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். யாருக்கும் அ.தி.மு.க. அஞ்சியதில்லை, அஞ்சப்போவதுமில்லை. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். கொள்ளையடிப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், தளவா ய்சுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், ஏ.கே. சீனி வாசன், மாவட்ட செயலா ளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.பி. சவுந்தர்ரா ஜன், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசைய ன்விளை பேரூராட்சி தலைவரு மான ஜான்சிராணி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா, முன்னாள் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளரும், முன்னாள் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவ ருமான பால்கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செந்தில்கு மார், பாசறை பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளசை தேவராஜ், நகர பேரவை செயலாளர் கவுந்தர் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி .ராமநாதன், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன், ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பாண்டியராஜ், நெல்லை 15-வது வட்டசெயலாளர் பாறை மணி, நெல்லை மேற்கு பகுதி பொருளாளர் காளி முருகன், இளைஞரணி விஷ்வகணேஷ், மூலைக்கரைப்பட்டி நகர துணைச்செயலாளர் எடுப்பல் காளிமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜாண்ரவி, ஆலங்குளம் பேரூர் துணைச்செயலாளரும், 12-வது வார்டு கவுன்சிலருமான சாலமோன்ராஜா, நெல்லை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், கருவந்தா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருன்மத்தேயு, புளியங்குடிநகர இளைஞரணி தலைவர் செல்வ சந்திரசேகரன், புளியங்குடி 1-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச்செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச் செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் காரிச்சாத்தான் முன்னாள் ஊராட்சி செயலாளர் முத்தையா, நடராஜன், திருநாவுக்கரசு, புதுச்சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தர்மராஜ், பிரித்விராஜ், கார்த்திகேயன், விக்னேஷ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயராணி, ஜெயராம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
    • அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன் பேரில் நாளை (புதன்கிழமை) மாலை சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று சங்கரன்கோவில் இந்திரா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பொது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், கந்தசாமி, நகர பேரவை செயலாளர் சவுந்தர், மாநில பேச்சாளர்கள் ராமசுப்ரமணியன், லட்சுமணன், கவுன்சிலர் சங்கரசுப்ரமணியன், மாணவரணி செயலாளர் மாரியப்பன், மோகன், பாசறை நிவாஸ், தங்கம், குட்டி மாரியப்பன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரெயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பி னருமான ராஜா எம்.எல்.ஏ. சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறையும் நெருங்கி வருகின்றன. எனவே அந்த நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் தென்காசி வழியாக அக்டோபர் 24, 25 மற்றும் நவம்பர் 13,14, (திங்கள், செவ்வாய் )விடப்பட்டால் கூட்ட நெரிசலைக் குறைக்கும். மேலும் விஜயதசமி மற்றும் தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் விஜயதசமி மற்றும் தீபாவளிக்கு தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தென் தமிழகத்தில் இருந்து காத்திருப்புப் பட்டியல்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளுக்கு பெரிதும் உதவும், எனவே இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்றனர்.
    • மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களில் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும், நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது பயோமைனிங் முறையில் பழைய குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடங்கள் தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகளும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது. அவற்றை தினமும் சுத்தம் செய்து அகற்றப்படும் வாறுகால் கழிவுகள் மற்றும் மண்ணையும் உரமாக்கிய பிறகு மீதமுள்ள மரக்கழிவுகள் போன்றவற்றை கொட்ட உரக்கிடங்கு தேவைப்படுகிறது. எனவே வாறுகால் கழிவுகள், மண்ணை கொட்டுவதற்கு தகுந்த இடத்தினை தேர்வு செய்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சங்கரன்கோவில் பகுதிகளில் தாமிரபரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.
    • மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோ வில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த மாதம் அமைச்சரால் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கரன் கோவில் தொகுதி நிலத்தடி நீர் இல்லாத பகுதி ஆகும். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், மானூர், சங்கரன் கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் தாமிர பரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.

    மழை இல்லாத நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வற்றி போவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வலியுறுத்தி உள்ளார்கள்.

    அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அம்பாசமுத்தி ரத்தில் இருந்து கடைய நல்லூர் வரை பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருக்கும்.

    அந்த பணிகள் தொடங்குவதற்கு தற்போது ஆய்வுகள் நடந்து கொண்டி ருப்பதாகவும், கூடிய விரை வில் திட்டம் செயல்படுத் தப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக் கப்படும் என தெரிவித்தார்.

    ×