search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sani Bhagavan"

    • எள் தீபமேற்றுங்கள்.
    • வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.

    சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம் காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தந்தருள்வார் சனீஸ்வரர்!

    சனியின் பார்வை நேரிடையாக நம் மீது பட்டுவிடக் கூடாது என்பார்கள். ஆயிரம்தான் கோவில்கோவிலாகச் சென்று சனி பகவானைத் தரிசித்து வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமலும் வாழ்ந்தால், எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

    ஆனாலும் சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றி வழிபடுவதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் கூடுதல் பலன்களை வழங்கும். அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்!

    சூரிய பகவானின் மைந்தன் சனி பகவான். அம்மா சாயாதேவி. சாயாதேவியை, நிஷூபா, ப்ருத்வி என்ற பெயர்களிலும் அழைக்கிறது புராணம்.

    திருப்பாற்கடலில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நாராயணன் காட்சி கொடுக்க, அவரின் நாபிக்கமலத்தில் இருந்து அவதரித்தார் பிரம்மா. பிறகு பிரம்மா, படைப்புத் தொழிலை ஏற்றார். சத்தியலோகத்தில் இருந்தபடி தன் படைப்புத் தொழிலைச் செய்து வந்தார். தன் பேராற்றலால், மரீசி, ஆங்கிரஸ, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் எனும் ஞானவான்களை, தபஸ்விகளைத் தோன்றச் செய்தார் பிரம்மா! இவர்கள் சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    மேலும் பிரம்மா தக்ஷப் பிரஜாபதி எனும் மகரிஷியை உலக நலனுக்காகச் சிருஷ்டித்து அருளினார்.

    மரீசி மகரிஷி, சம்பூதி என்பவளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காசியப முனிவர் பிறந்தார். இந்த முனிவர், தக்ஷபிரஜாபதியின் மகள் அதிதியை மணந்தார்.

    பிறகு, காசியப முனிவர் தம்பதிக்கு நிறைய குழந்தைகள் பிறந்தனர் என்கிறது புராணம். இவர்கள் காசியப புத்திரர்கள் என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள். அத்யந்த தேஜஸ் பொருந்திய இவர்கள், துவாதச ஆதித்யர்கள் எனும் திருநாமத்துடன் போற்றப்பட்டனர். இவர்களில் மூத்தவர்... சூரிய பகவான்!

    சூரிய பகவான், தேஜஸ் கொண்டவர். ஒளி மிகுந்தவர். அந்த ஒளியைக் கொண்டு, உலகுக்கே வெளிச்சம் பாய்ச்சுபவர். சொர்ண ரூபம் என்று வர்ணிக்கிறது புராணம். ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும் ஐஸ்வரியங்களையும் அள்ளி வழங்கக் கூடிய வள்ளல். அதனால்தான் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்!

    உத்தராயன காலத்தில் புறப்படுகிறார். தட்சிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் எனும் சிகரத்தை அடைந்து அங்கே எழுந்தருள்கிறார்.

    சூரிய பகவானுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் திருமணம் நடக்க, அவர்களுக்கு சிராத்த தேவனும் யமதர்மராஜனும் மகன்களாகவும் யமுனை மகளாகவும் பிறந்தனர். இவர்களில் யமுனையும் யமனும் இரட்டைப் பிறவிகள் என்றும் சொல்லுவார்கள்.

    ஒருகட்டத்தில், சூரிய பகவானின் உக்கிர கிரணங்களைத் தாங்கும் சக்தியானது மனைவி சுவர்ச்சலாதேவிக்கு குறைந்துகொண்டே வந்தது.

    இதையடுத்து சுவர்ச்சலாதேவி, வனத்துக்குச் சென்று, கடும் தவம் புரிந்தாள். ஆனால் இதையெல்லாம் சூரியனாரிடம் சொல்லக் கூட சக்தியற்று இருந்தாள்.

    அப்போது ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைப் போலவே பேரெழில் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்கினாள். கிட்டத்தட்ட நிழல் போல் தோன்றிய அந்தப் பெண், சுவர்ச்சலாதேவியைக் கண்டு வியந்தாள். மலைத்தாள். என் சாயலில் நீ இருக்கிறாய் அல்லவா. ஆகவே உனக்கு சாயா என்று பெயர் சூட்டுகிறேன் என்றாள் நான் வனத்தில் தவமிருந்து வரும் வரைக்கும், நீ நானாக இருப்பாயாக என்றாள்.

    ஏதேனும் ஒரு நெருக்கடிச் சூழல் வந்தால், உண்மையைச் சொல்லுவேன் என்றாள் சாயாதேவி. அதன்பிறகு சுவர்ச்சலாதேவி தந்தை வீட்டுக்குச் சென்றாள். அவரிடம் விஷயத்தைச் சொல்ல, தந்தை கோபம் கொண்டார்.

    'எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறாய். கணவனை விட்டு இப்படிப் பிரியலாமா. உன்னுடைய இடத்தை இன்னொருத்திக்குத் தரலாமா' என்று பொரிந்து தள்ளினார்.

    மனம் வெறுத்துப் போனாள் சுவர்ச்சலாதேவி. தன்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்று குதிரை உருவெடுத்தாள்.

    அங்கே... சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள் சாயாதேவி. சுவர்ச்சலாவின் குழந்தைகளிடம் பிரியமும் அன்பும் கொண்டு வளர்த்தாள். சூரியனாருக்கும் சாயாவுக்கும் தபதீ என்று மகளும் ஸ்ருதச்ரவஸூ, ஸ்ருதகர்மா என இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.

    இந்த ஸ்ருதகர்மாதான், பின்னாளில் சனீஸ்வரன், சனைச்சரன் என்றெல்லாம் போற்றப்பட்டார்!

    தனக்கென குழந்தைகள் வந்ததும் மாறிப்போனாள் சாயா. இதனால் சுவர்ச்சலாவுக்குப் பிறந்த எமதர்மன் உள்ளிட்டோரிடம் கொஞ்சம் மெத்தனமாகவே நடந்துகொண்டாள். இதனால் எமதர்மன் ரொம்பவே வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

    அப்பாவிடம் இதையெல்லாம் சொல்லி முறையிட்டார். சொல்லும்போது கண்கலங்கிப் போனார் எமதர்மன். 'தர்மத்தின் படி நடந்து வரும் உன்னிடமே இப்படி பாரபட்சம் காட்டுகிறாளா' என்று அதிர்ந்து போனார் தந்தை.

    மனைவி மீது கடும் கோபம் கொண்டார். அவளை அழைத்து விசாரித்தார். ஆனால் சாயாதேவி பதிலேதும் சொல்லாமல் மெளனமாகவே இருந்தாள். இதில் இன்னும் ஆத்திரமடைந்த சூரிய பகவான், அவளை சிகையைப் பிடித்து இழுத்தார். அதுவரை மெளனமாக இருந்தவள், சுவர்ச்சலாதேவிக்குச் சொன்னது போல், இப்போது சொல்லும் தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தாள்.

    தவறு சாயாதேவியிடம் இல்லை என உணர்ந்த சூரியனார், அவளை மன்னித்தார். அதேவேளையில், சுவர்ச்சலாதேவி இருக்குமிடத்தை தன் ஞானதிருஷ்டியால் கண்டறிந்தார். அங்கே சென்று, அவளையும் ஏற்றுக் கொண்டார்.

    அதையடுத்த தருணத்தில்... சூரியனாருக்கும் சுவர்ச்சலாதேவிக்கும் இன்னொரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை... அஸ்வினிதேவர். தேவலோக வைத்தியர்கள் எனும் பெயர் பெற்றுத் திகழ்ந்தார். இதையடுத்து ரைவதன் எனும் மகனும் பிறந்தான்.

    அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரண்டுபேருடனும் பத்மாசனத்தில் எழுந்தருளினார்.

    பெருமை மிகுந்த சனீஸ்வரரின் சரிதத்தை உணர்ந்து, அவரை வணங்கி, சனிக்கிரக பாதிப்பில் இருந்து விலகுவோம். சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று, இனிதே வாழ்வோம்!

    சனிக்கிழமை நாளில், விரதம் இருந்து சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். எல்லா நலமும் வளமும் தந்து, வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.

    • புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே.
    • பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

    புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. பெருமாள் பணக்காரர் தான்! ஆனாலும், எளிமையை விரும்புகிறார் கவனித்தீர்களா?

    வைணவ சம்ரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அந்த அரிசியை மறுநாள் ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து, மலை போன்ற அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி செய்து "கோவிந்தா" என்ற நாமம் முழங்க மாவிளக்கேற்றுவது வழக்கம்.

    நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலையிலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு.

    கன்னி மாதத்தில் (புரட்டாசி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினத்தில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

    புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    எமபயம் நீக்க வழிபாடு

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக்கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன், மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும் தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

    சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன் கோவில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.

    கன்னி ராசியில் சூரியன் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன். அந்த புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார். ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.

    புதனுக்கு வெகு நட்பு கிரகம் என்பது சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில் சூரியன் வந்து விழும் காலம் புரட்டாசி மாதம். எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் தமிழில் புரட்டாசி என்றும், ஸெளரமானத்தில் கன்யாமாஸமென்றும், சாந்த்ரமானத்தில் பாத்ரபதமென்றும் இப்புரட்டாசியைச் சொல்வார்கள்.

    புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன்மேல் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன் லீலாவிபூதியில் பாரததேசத்தில் ஆதிசேஷனை மலையாக ஆகும்படிச் செய்து அதன்மேல் நின்ற திருக்கோலமாகக் காட்சியளிக்கின்றான். திருமலையில், ஏன் நிற்கிறான் என்றால் திருவடி முதல் திருமுடி வரை நாராயணனைப் பார்த்தால் மகாபாவங்கள் யாவும் விலகுகின்றன. சிறிய பாபங்கள் விலகிப் போகுமென்று சொல்ல வேண்டுமா? ஆகையால்தான் திருவடி முதல் திருமுடி வரை பக்தர்கள் வணங்கிடும் விதத்தில் அழகாக நிற்கின்றார். அப்படிப்பட்ட திருவேங்கடவனின் அவதாரமாதம் புரட்டாசியாகும். மேலும் அவருடைய அபராவதாரமான ஸ்வாமி தேசிகனும் அவருடைய அபராவதாரமான ஸ்ரீஆதி வண்சடகோப மஹா தேசிகனும் அவதாரமான மாதம் புரட்டாசியே ஆகும். ஆகையால் அவர்களுடைய திருநட்சத்திர மஹோத்சவங்கள் இந்த மாதம் பூராவும் நடைபெறுவதால் மற்ற எதுவும் செய்ய வழியில்லை. அதனால் புரட்டாசி உயர்ந்தது.

    மார்கழி மாதம் பூராவும் பகவானை ஆராதிக்கும் நாள்தான். ஆனால் இரண்டு அம்சங்கள் புரட்டாசிக்கு அதிகமாக உண்டு. தேவதா ஆராதனத்துடன் பித்ருக்கள் ஆராதனமும் இம்மாதம் செய்யப்படுகிறது. பித்ருக்கனை ஆராதிக்கும் மஹாளயம் ஒன்று, பெண்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தரும் நவராத்திரி உத்சவமும், ஆக இரண்டு. ஆகையால் புரட்டாசி பெருமை பெறுகிறது. பகவானையும், பித்ருக்களையும், ஆசார்யர்களையும், பெண் கடவுளரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி இவர்களையும் ஆராதிப்பதால் தன்னிகரில்லாத் தனித்தன்மை பெறுகிறது புரட்டாசி.

    கன்னிகா மாதந்தன்னில் கனத்ததோர் சனி வாரத்தில்

    இந்நிலம் தன்னில் உள்ளோர் யாவரும் உம்மை நோக்கி

    உன்னிதமாகவேதான் ஒருபொழுது இருந்தவோர்க்கு

    முன்னுள்ள பாவம் தீர்ப்பாய் முகுந்தனே போற்றி போற்றி.

    புரட்டாசி 3-வது சனிக்கிழமை அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1வது, 5வது சனிக்கிழமையில் போடுவாங்க. பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    தளியல் படையல்கள் :

    உப்பு போடாத சாதத்தில் வெல்லம், தயிர் சேர்த்த சாதம், பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் தேங்காய் சாதம், காராமணி சுண்டல், உருளை வறுவல், பாசிப்பருப்பு பாயாசம், முருங்கைக் கீரை பிரட்டல், கொள்ளு வடை, அப்பளம், சாம்பார்.

    • சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது.
    • மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.

    "புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

    சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5-வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8-வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12-வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2-வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர். இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.

    இத் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. இத்தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம். இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.

    சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

    சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கருப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றிச், அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றய விரதங்களின் போது எண்ணெய் வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணெய் வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப்பெறுகின்றது. காரணம்;

    நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

    இத்தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணைய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை.

    அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

    சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

    அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.

    இந்திரஜித்து இராவணனின் மகன். இவன் பிறப்பதற்கு முன் இராவணன் ஜோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

    சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கருப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

    சனி காயத்ரி மந்திரம்:

    பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!

    தந்நோமந்த ப்ரசோதயாத்!!

    சனீஸ்வரன் தோத்திரம்:

    முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்

    மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ

    கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்

    சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

    நவகிரக தோத்திரம்:

    ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி

    ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி

    ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி

    ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி

    ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி

    ஓம் பொற்ப்ட் டுடையி பொழிவாய் போற்றி

    ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி

    ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி

    ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி

    ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி

    ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி

    ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி

    ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி

    ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி

    ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி

    ஓம் முத்துவிமான வாகனா போற்றி

    ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி

    ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி

    ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி

    ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி

    ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி

    ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி

    ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி

    ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி

    ஓம் பூதேவி குமரா பௌமா போற்றி

    ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி

    ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி

    ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி

    ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி

    ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி

    ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி

    ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி

    ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி

    ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி

    ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி

    ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி

    ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி

    ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி

    ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி

    ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி

    ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி

    ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி

    ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி

    ஓம் இளையை மணந்த எழிலே போற்றி

    ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி

    ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி

    ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி

    ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி

    ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி

    ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

    ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி

    ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி

    ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி

    ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

    ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி

    ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி

    ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி

    ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

    ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி

    ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி

    ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

    ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி

    ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி

    ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி

    ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

    ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி

    ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி

    ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி

    ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

    ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி

    ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி

    ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி

    ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி

    ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி

    ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி

    ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி

    ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி

    ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி

    ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி

    ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி

    ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி

    ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி

    ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி

    ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி

    ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி

    ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி

    ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி

    ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி

    ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி

    ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி

    ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி

    ஓம் இராஜபோகம் தரு இராகுவே போற்றி

    ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி

    ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி

    ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி

    ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி

    ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி

    ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி

    ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி

    ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி

    ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி

    ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி

    ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி

    ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

    என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுஷ்டிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுஷ்டிக்க வேண்டும்.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.

    "வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

    மிக நல்ல வீணை தடவி

    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

    உளமே புகுந்த அதனால்

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

    சனி பாம்பிரண்டு முடனே

    ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க

    எருதேறி யேழை யுடனே

    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

    உளமே புகுந்த அதனால்

    ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்

    உடனாய நாள்க ளவைதாம்

    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

    அடியாரவர்க்கு மிகவே. "

    "உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து

    உமையோடும் வெள்ளை விடைமேல்

    முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

    திசை தெய்வமான பலவும்

    அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து

    மறையோது மெங்கள் பரமன்

    நதியடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்

    கொடுநோய்களான பலவும்

    அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்

    விடையேறு நங்கள் பரமன்

    துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்

    மிகையான பூதமவையும்

    அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்

    மடவாள் தனோடும் உடனாய்

    நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்

    உளமே புகுந்த அதனால்

    கோளரி உழுவையோடு கொலையானை கேழல்

    கொடு நாகமோடு கரடி

    ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக

    விடையேறு செல்வ னடைவார்

    ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    வெப்பொடு குளிரும் வாத மிகையானபித்தும்

    வினையான வந்து நலியா

    அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து

    மடவாள் தனோடும் உடனாய்

    வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்

    உளமே புகுந்த வதனால்

    ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும்

    இடரான வந்து நலியா

    ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "பலபல வேடமாகும் பரனாரி பாகன்

    பசுவேறும் எங்கள் பரமன்

    சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்

    வருகால மான பலவும்

    அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

    குணமாய வேட விகிர்தன்

    மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

    திருநீறு செம்மை திடமே

    அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியாரவர்க்கு மிகவே."

    "தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

    வளர் செம்பொன் எங்கும் திகழ

    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

    மறைஞான ஞான முனிவன்

    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

    நலியாத வண்ணம் உரைசெய்

    ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்

    அரசாள்வர் ஆணை நமதே."

    • ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார்.
    • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.

    ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.

    ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார். ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் மொத்தம் ஏழரை ஆண்டு காலம் உலகத்தின் உண்மை நிலையை உணர வைத்து விடுவார். அதே போல சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும்..8ஆம் வீட்டில் அமரும் போது அஷ்டமத்து சனியாகவும் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களைத் தருவார் சனிபகவான்.

    நம்முடைய ஜாதகத்தில் எத்தகைய சனி நிகழ்ந்தாலும் நம்முடைய வினை பயன் மூலமே நன்மையோ தீமையோ நிகழ்கிறது. ஜாதகத்தில் என்ன வகையான சனிகள் இருக்கின்றன.. அவை என்னவெல்லாம் பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பதைப்பற்றி தான் நாம இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.

    ஏழரை சனி

    ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

    ஜென்ம சனி

    ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

    அஷ்டம சனி

    அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினைகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்னைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள் மற்றும் 40 வயட்திற்குட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

    அர்த்தாஷ்டம சனி

    அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும் சனியாகும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

    கண்டக சனி

    கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமோ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன.
    • ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

    "புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;

    8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

    இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.

    இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என ஜோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

    சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

    அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.

    அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

    சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

    • திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
    • இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது.

    "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

    அகண்ட தீபம்

    சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த குறையன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

    சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "" பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    மாவிளக்கு மகிமை

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான "நவநீதமும் படைப்பதுண்டு. "அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், ""கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று தர்மம் எடுத்து வரச் சொல்லுவர். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே "கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.

    பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய

    மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

    சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்து விட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர். சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

    • ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது.
    • 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.

    ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும்.

    ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

    சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.

    அஷ்டமச் சனியும் திருமணமும்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்

    எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

    • சனி என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.
    • பலர் நினைப்பதுபோல சனி பகவான் தீங்கிழைப்பவர் அல்ல.

    சனி பகவானை திருநள்ளாறு சென்றோ அல்லது அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவக்கிரக சனியையோ வழிபட்டு, அவருக்கு மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் சாதம் படைத்து, அதனை ஏழை- எளியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தானமாக வழங்கலாம். இதனால் உங்களுக்கான சோதனைகள் மறைந்து மன அமைதி உண்டாகும். ஆஞ்சநேயர் மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து வருவதனாலும், சனி பகவானால் ஏற்படும் இடையூறுகள் அகலும்.

    சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வணங்குங்கள். பெற்றோர் அல்லது அவர்களுக்கு இணையான அனுபவம் பெற்ற முதியவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆசிபெறுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தரிசித்து வருவதுடன், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும். ஊனமுற்றோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதாலும், சனியின் தாக்கம் குறையும்.

    பொதுவாக சனி என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள். 'எனக்கு ஏழரைச் சனி நடக்கிறது, எனக்கு அஷ்டமத்துச் சனி நடக்கிறது' என்று அச்சம் அடைபவர்கள் ஏராளம். ஆனால் பலர் நினைப்பதுபோல சனி பகவான் தீங்கிழைப்பவர் அல்ல. அவர் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்றபடி பலன்களை அளிக்கும் நீதிமான். அதனால்தான் தராசு சின்னத்தைக் கொண்ட துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். அதோடு நவக்கிரகங்களில் அவருக்கு மட்டுமே 'ஈஸ்வர' பட்டம் இருக்கிறது. கோச்சாரம் என்பது தற்போதைய கிரகநிலைகளை குறிக்கும். அதன்படி எந்த ராசிக்கு சனி என்ன பலன் தருகிறார் என்பதை வைத்தே, பலன் கூறப்படுகிறது.

    ஏழரைச் சனி

    ஒருவர் பிறந்த ராசிக்கு மொத்தம் 7½ ஆண்டுகள் சனி பிடிப்பதைத்தான், 'ஏழரைச் சனி' என்கிறோம். ஒருவரின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அதற்கு அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் என்று இருப்பதையே, இந்த 7½ ஆண்டுகள் குறிக்கும். உங்களுடைய ராசி மேஷம் என்று வைத்துக்கொண்டால், அதற்கு முந்தைய வீடான மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் நேரத்தில் இருந்து உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்கும். உங்கள் ராசிக்கு அடுத்த ராசியான ரிஷப ராசியைக் கடக்கும் வரை இந்த ஏழரைச் சனி நீடிக்கும். உங்கள் ராசிக்கு முந்தைய வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது, அவர் 'விரயச்சனி'யாகவும், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும்போது 'ஜென்மச் சனி'யாகவும், ராசிக்கு அடுத்த இடத்திற்குச் செல்லும் போது, 'பாதச்சனி'யாகவும் பெயர்மாற்றம் அடைகிறார்.

    விரயச் சனி

    ஏழரைச் சனியில் முதல் 2½ ஆண்டுகள், உங்கள் ராசிக்கு முந்தைய இடமான விரய ஸ்தானத்தில், சனி பகவான் இருப்பார். அப்போது நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், தேவையற்ற பணவிரயம், மருத்துவச் செலவு, கல்வியில் மந்தம், குடும்பத்தில் அடிக்கடி பொருட்கள் விரயமாதல், பயணங்களில் விபத்து, அலைச்சல் போன்றவை ஏற்படக்கூடும். சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், இந்த பாதிப்புகள் அனைத்தும் வெகுவாக குறையும்.

    ஜென்மச் சனி

    ஏழரைச் சனி காலத்தில் அடுத்த 2½ ஆண்டுகள் உங்கள் ராசியிலேயே, சனி பகவான் இருப்பார். இதனை ஜென்மச் சனி என்பர். இந்த 2½ ஆண்டுகளும் அதிக சோதனைகளைக் கொடுப்பார். உடல்நலக்குறைவு, தொழிலில் பெரும் மாறுதல், தொழில் இழப்பு, இடம்பெயர்தல் போன்ற அசுப பலன்கள் அதிகமாக நடந்தேறும். மனைவிக்கு ஆரோக்கியமின்மை, உறவினர்களின் பகை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து இழப்பு, சோதனை மேல் சோதனை உண்டாகும். சிறைவாசம், நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை என்று விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறலாம். இந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனிக்குரிய தசாபுத்தி சாதகமாக அமையப் பெற்றிருந்தால், கெடுபலன்கள் சற்று குறைந்து, மன அமைதி ஏற்படும்.

    பாதச் சனி

    உங்கள் ராசிக்கு அடுத்த இடத்தில் கடைசி 2½ ஆண்டுகள் சனி இருப்பதை, 'பாதச்சனி' என்பர். இந்த காலகட்டத்தில் இதுவரை இருந்த சோதனைகள் சற்றே குறையும். ஆனால் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டதாகக் கருத முடியாது. பாதச்சனி காலத்தில், சனி பகவான் உங்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பார். இருப்பினும் அதிர்ஷ்ட வாழ்வு வாழ தடை ஏற்படுத்துவார். பெற்றோருக்கு கெடுபலன்களைத் தருவார். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டை தோற்றுவிப்பார். பாதச்சனி நடைபெறும் காலத்தில் கடைசி 6 மாதங்களில் வருமானம் முன்னேற்றம் தரும். குடும்பத்தில் சிக்கல் குறையும். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். நலமிக்க வாழ்வு அமையும். வழக்கில் வெற்றி உண்டாகும். வாகன யோகம் கிடைக்கும்.

    'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம், சென்னை.

    • திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.
    • கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம் என்பது விசேஷ தகவல். சூரிய பகவான் அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது.

    அதுவே பிற்காலத்தில் மருவி திருக்கொடியலூர் என்றானது என்றும் கூறப்படுகிறது.

    சனீஸ்வரர் பிறந்த இந்த திருக்கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம். திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.

    இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி.

    இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.

    உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின் பிறந்த தலம் இந்த திருக்கொடியலூர்.

    சுவாமியினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்மராஜனும் காட்சியளிக்கின்றனர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், பிறந்த சிறு குழந்தைக் நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார் என்று ஒரு ஐதீகம்..

    இந்த தலத்தில் பரிவார தேவதைகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

    ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான் இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகியதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான்.

    ஆனால் இத்தலத்தில் பிறந்த சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவும் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள்.

    ஆலய அமைப்பு:

    ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இறைவனுக்கு இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர்,

    லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள்.

    மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

    இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை. ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும்

    நீங்குகிறது.

    இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.

    • எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள்.
    • உங்கள் மனசாட்சி தான் சனிபகவான்.

    3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

    லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள்.

    அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாகும். முதலாளிகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்கமாட்டார்கள்.

    மேலும் ராசிக்கு 3,6,11-ல் சனி வரும் போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்க முடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஏழரை, அஷ்டமச் சனி ஆரம்பித்தவுடன் வாழ்நாளில் மீள முடியாத இழப்பை சந்திக்க நேருகிறது. புதிய தொழில் முனைவோர்கள், புதியதாக பெரிய தொழில் முதலீடு செய்பவர்கள் சுய ஜாதக ஆலோசனைக்குப் பிறகே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    அதாவது கோட்சார சனி சாதகமாக இருக்கும் காலங்களில் சம்பாதித்த பணத்தை கோட்சார சனி சாதகமற்ற இடங்களுக்கு வரும் காலங்களில் இழந்துவிடுகிறார்கள். சனிபகவான் கர்ம காரகர், ஆயுள் காரகர், ஒருவர் ஜாதகத்தில் ஜனனம் முதல் வாழ்நாள் இறுதி வரை சனி பகவானின் ஆதிக்கம் தான் தொடரும். சனிபகவான்-வாயு, காற்று .அதாவது பிராணன் (சுவாசம்), குரு பகவான் அங்கத்தில் மூக்கு என்றால் அதனுள் ஏற்படும் சுவாசக்காற்று சனி பகவானே.

    கால புருஷ 10, 11-ம் அதிபதி என்பதால் தொழில், உத்தியோகம் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களுக்கு இவர்தான் பிரதிநிதியானவர். நீதி வழங்கும் நீதிமானாவார். சனி பகவானை கணிப்பதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். கொடுப்பதும் அதனை கெடுப்பதும் அவரே. கொடுக்கும் போது அளவில்லாமல் கொடுப்பார். அதேபோல கெடுக்கும் போது அனைத்தையும் உருவி விடுவார்.

    நன்மை செய்தால் நன்மையை பலனாகவும், தீமை செய்தால் தீமையை பலனாகவும் தருபவர். இதற்காக தான் "நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு கெடுதலை செய்யாமல் இருப்பது நல்லது" என்று சொல்வார்கள். யாரையும் எளிதாக ஏய்துவிடலாம் ஏமாற்றியும் விடலாம். ஆனால் இது சனி பகவானிடம் செல்லாது.

    பரிகாரம்

    ஒரு மனிதன் சனி பகவானால்தான் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருகிறார்கள். 'நம்ம கையில எதுவும் இல்லை' என்கிற சரணாகதி தத்துவமும் புரிகிறது. எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி பகவான் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாக நேரும்.

    உங்கள் மனசாட்சி தான் சனிபகவான். சனி பகவான் தான் உங்கள் மனசாட்சி. பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.

    தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் சிவ வழிபாடு அன்னதானம் செய்வது சிறப்பு.

    சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

    தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தாக்கம் குறையும்.

    திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

    சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    • எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
    • வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும்.

    சிவல்புரிசிங்காரம் பேசியதாவது:-

    அனுமன் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் பிறந்தவர் எனவே அன்று பிறந்தவர்கள் எல்லாம் அனுமன் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்லலாம். அதுமட்டுமல்ல ஏழரைச் சனி,அஷ்டமத்துச் சனி,அா்த்தாஷ்டச் சனி, கண்டகச் சனி போன்றவற்றின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் தானாக விலகும். எதிரிகள் பலம் குறையும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    துளசி மாலை அணிவித்தால் துயரங்கள் துள்ளி ஓடும். வடைமாலை சூட்டினால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். இப்போது மிதுனம்,கடகம், துலாம், தனுசு,மகரம். கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்கள் அவசியம் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.அதுமட்டுமல்லாமல் மற்ற ராசிக்காரர்களும் அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் சீரும், சிறப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பக்தர்கள் தோஷங்கள் தீரவும், வளமான வாழ்வுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
    • வருகிற 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 20-ந்தேதி திருவிழா நிறைவடைகிறது.

    தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வரருக்கு அமைந்துள்ள தனி கோவில் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தங்களின் தோஷங்கள் தீரவும், வளமான வாழ்வுக்கும் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான காகம் பொம்மைகளை வாங்கி காணிக்கையாக செலுத்தியும், எள் சாதம் படைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில் அருகில் உள்ள சுரபி நதியில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவில் வருகிற 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 6-ந்தேதி சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக் காப்பு சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதைத்தொடர்ந்து வருகிற 15-ந்தேதி சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது சோணை கருப்பணசாமிக்கு ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களை படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து 20-ந்தேதி திருவிழா நிறைவடைகிறது.

    திருவிழா நடக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேனி, சின்னமனூர், தேவாரம், போடி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ×