search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sampath MLA Request"

    • முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
    • நாட்காட்டிகள், அரசு நாட்குறிப்புகள், அரசு சார்பில் வெளியிடப்படும் தொலைபேசி அடைவு, ஆகியவற்றை கொண்டே விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒரு மாநிலத்தின் தற்போதைய அரசு நிர்வாகத்தை பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், சுற்றுலா பயணிகள் அரசு சார்பில் வெளியிடப்படும் நாட்காட்டிகள், அரசு நாட்குறிப்புகள், அரசு சார்பில் வெளியிடப்படும் தொலைபேசி அடைவு, ஆகியவற்றை கொண்டே விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.

    நிதி நிலைமையை காரணம் காட்டி 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் அரசின் சார்பில் நாட்காட்டிகள், நாட்குறிப்புகள், தொலை–பேசி அடைவுகள் ஆகியவை அச்சிட்டு வெளி–யிடப்படவில்லை.

    இதனால் அரசு அலு–வலகங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கொடுக்கப்படும் நாட் காட்டிகளையே வைத்துள்ளனர். இவை பொது மக்களின் பார்வைக்கு படும் வகையில் உள்ளது.

    2021-ம் ஆண்டு பழைய ஆட்சியே இருந்ததால் புதிதாக அச்சிடப்படவில்லை என்றாலும் அப்போதைய நிர்வாகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 2020 அச்சடிக்கப்பட்ட நாட்காட்டியை பயன் படுத்திக்கொள்ளலாம்.

    ஆனால், 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2022-ம் ஆண்டு அரசின் சார்பில் புதிய நிர்வா–கத்தை காட்டும் விதமாக புதிய நாட்காட்டி நாட்குறிப்பு தொலைபேசி கடைவு ஆகியவை வெளியிடப்படாதது வருத்தத்திற்குரியது.

    எனவே முதல்-அமைச்சர் அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான நாட் காட்டிகள், நாட்குறிப்புகள், தொலை–பேசி அடைவு–கள் ஆகியவை வெளி–யிட தேவையான நடவடிக்கையை எடுக்கு–மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×