search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sampath MLA Condemnation"

    • புதுவையில் நிலம் சம்பந்தமான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டால் தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில உரிமைகளை மீட்கும் எண்ணத்தில் தனது எச்சரிக்கையை பதிவு செய்திருந்தார்.
    • புதுவையில் மக்கள் மன்றத்தில் தோற்று தனது அதிகார பலத்தை இழந்து நிற்கும் அ.தி.மு.க. முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

    புதுவையில் நிலம் சம்பந்தமான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டால் தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில உரிமைகளை மீட்கும் எண்ணத்தில் தனது எச்சரிக்கையை பதிவு செய்திருந்தார்.

    புதுவையில் மக்கள் மன்றத்தில் தோற்று தனது அதிகார பலத்தை இழந்து நிற்கும் அ.தி.மு.க. முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். மக்கள் மீது உண்மையான மரியாதையையும் அன்பையும் வைத்திருக்கும் தி.மு.க.வை குற்றம் சொல்ல புதுவை அ.தி.மு.க.விற்கு தகுதி கிடையாது.

    நில உரிமையை கவர்னர் வசம் ஒப்படைத்தால் புதுவை அரசு, அரசு சார்பு நிறுவனங்களின் வசம் உள்ள சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 1,500 ஏக்கர் நிலங்கள் அவரின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல நேரிடும்.

    மக்களால் தேர்ந ்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் மக்களின் தேவை, மக்களின் மன ஓட்டம் அனைத்தும் முழுமையாக தெரியும் மக்கள் நலன்சார்ந்து ஏதேனும் ஒரு கொள்கை முடிவு நிலம் சார்ந்து எடுக்கும் பட்சத்தில் கவர்னருக்கு ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் நிலத்தை கையாளும் உரிமையை வழங்க வேண்டும்.

    புதுவையின் நில உரிமையை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது என்ற தி.மு.க.வின் முழக்கத்திற்கு அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து வலு சேர்க்க வேண்டும். மாநில உரிமைக்கு குரல் கொடுக்க, அணி திரளும் நேரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தி.மு.க. முறியடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×