search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saha"

    இங்கிலாந்து தொடரில் ஆல்வுண்டரின் பங்களிப்பை இந்திய அணி தவறவிட்டு விட்டது என்று முன்னாள் வீரர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 1-3 இழந்தது.

    இந்நிலையில் ஆல்ரவுண்டரின் பங்களிப்பை இந்தியா தவற விட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து எல் சிவராம கிருஷ்ணன் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமாரை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்திருப்பார்.



    இந்தியா தொடரை இழப்பதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவை விட புவனேஸ்வர் குமார் அதிக ரன்கள் அடித்திருப்பார். அதேபோல்தான் சகா. இவர் அதிக அளவில் ‘பைஸ்’ ரன்கள் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். அதேபோல் அதிக ரன்களும் குவித்திருப்பார். இருவரும் இடம் பிடித்திருந்தால் இந்தியாவை அதிக அளவில் பாதித்திருக்காது’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான சகா, தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருக்கிறார். #Saha #BCCI
    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றதும் விருத்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்று ஐபிஎல் தொடரில் சகா சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது இவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரால் பங்கேற்ற இயலவில்லை.

    இதற்கிடையே நீண்ட நாட்களாக அவரை அச்சுறுத்தி வந்த தோள்பட்டை காயத்திற்காக பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவரது தோள்பட்டை காயம் குணமடையவில்லை. இதனால் அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.



    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘விருத்திமான் சகாவின் தோள்பட்டை காயத்திற்கான சிகிச்சை முற்றிலும் தவறாக சென்று விட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோ நேரம் வீணானதுதான் மிச்சம். மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இரண்டு மாதத்திற்குப் பிறகுதான் பேட்டிங் செய்ய இயலும். அதன்பின் அவரது காயம் குணமடைவதற்கான வேலை தொடங்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விர்திமான் சகா இடம்பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை தொடருவார். #EnglandVsIndia #Saha
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் முடிந்ததும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான விர்திமான் சகா, டெஸ்ட் போட்டிக்கு திரும்பமாட்டார் என தெரிகிறது. ஐபிஎல் போட்டியின்போது அவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் குணமடையவில்லை. முழுமையாக குணமடைந்து உடற்தகுதி பெறுவதற்கு நான்கைந்து வாரம் ஆகலாம் என்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான்.  அவருக்குப் பதிராக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக களமிறங்குவார்.



    தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிந்ததும், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #EnglandVsIndia #Saha
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். #INDvAFG #DineshKarthick
    மும்பை:

    வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
    ×