search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silambam competition"

    • விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான யோகா, சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து,வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான 16-பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட யோகா, சிலம்பம், பரதநாட்டிய போட்டிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அதிகாரி ராகவன், பள்ளி முதல்வர் மாயாதேவி,யோகா, ஆசிரியர் கருப்பசாமி, சிலம்பம் ஆசிரியர் சிவலிங்கம், பரதநாட்டிய ஆசிரியை நாகேஸ்வரி உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
    • கல்லூரியின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி யின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    அதில் சூப்பர் சீனியர் தனிநபர் ஒற்றை சுழற்சி போட்டியில் முதலிடமும், சிலம்பு சண்டை போட்டியில் முதலிடமும் பெற்று 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்காக ஊக்கம் அளித்த பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ் குமார், சாமுவேல் அமர்நாத், எஸ்தர் ராணி ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறு வனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
    • நவீன் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின், ஆதித்தனார் கராத்தே சிலம்பம் கிளப் சார்பாக வணிக நிர்வாகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜே.நவீன் கலந்து கொண்டார். அவர் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

    இந்த மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா, உதவி பேராசிரியர்கள் அ.தர்மபெருமாள், ம.ரெ.கார்த்திகேயன், டி.செல்வகுமார், சிலம்பம் பயிற்சியாளர் வி.ஸ்டீபன், கராத்தே சிலம்பம் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.ரா.ப.தி.முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • புளியரையில் உள்ள பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சுரண்டை:

    இந்திய தற்காப்பு கலைகளை வளர்க்கும் பள்ளியின் சார்பாக புளியரையில் உள்ள பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் 25 பள்ளிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் பரிசை ஒருவரும், இரண்டாம் பரிசை 3 பேரும், மூன்றாம் பரிசை 2 மாணவர்களும் பெற்றனர். பள்ளி முழுமைக்கான கேடயத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல் வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது
    • புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது.

    சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவி அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை அமைச்சூர் சிலம்பம் சங்கம் பொருளாளர் காணி, மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் விஜயநாராயணம், ஊசிகாட்டான் ரூபன், இந்திரன் சிலம்பம் பள்ளி செயலாளர் சிவக்குமார், வேந்தன் நெல்மணி, செயலாளர்களான சின்னத்துரை சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் செயலாளர் ஜென்சி நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பதிவை சிலம்பம் பள்ளியின் பொருளாளர் சாமுவேல், பானுமதி, டேனியல், மரிய கோல்டா சிறப்பாக செய்திருந்தனர்.

    • சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். யுவராஜ் குருரூபவ் முதலிடத்தையும், பிரதிவ் வாசன்ரூபவ் 2-ம் இடத்தையும், அஸ்வின் 3-ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

    முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்களை வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பாராட்டி பரிகளை வழங்கினார்.

    • மாநில சிலம்பாட்ட போட்டியில் கம்பம் மாணவர்கள் முதல் 5 இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
    • சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

    கம்பம்:

    மாநில அளவிலான குழு போட்டியும், தனி சிலம்பாட்ட போட்டியும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மற்றும் கூடலூரை சார்ந்த இரட்டைவால் அக்னி ஆகிய தற்காப்பு பயிற்சி பட்டறைகள் சார்பில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு முதல் 5 இடங்களை பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா கம்பத்தில் ராணா ஸ் லாடபதி பயிற்சி பட்டறையின் பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையில் நடத்தப்பட்டது. கூடலூர் பயிற்சியாளர் திருமால் முன்னிலை வைத்தார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் எம். எல். ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

    கம்பம் நகர்மன்றத் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், தி.மு.க. தெற்கு நகர பொறுப்பாளர் சூர்யா செல்வகுமார் மற்றும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்
    • இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி உள்ளிட்ட 5 பேர் தங்கம் வென்றனர்

    திருச்சி:

    திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. குமரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த 350 சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் ஆசான் சீனிவாசன் தலைமையில் 9 சிலம்பம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    5 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரிவினரும், 13 வயது முதல் 17 வயது வரை ஒரு பிரிவினரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி, நந்தன ராஜேஷ், ரித்திகா காந்தி, மாதவன், சண்முக பிரியன், மலரவன், ஷாமினி பிரியா, அர்ச்சனா ஆகியோரில் 5 பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றனர்.

    4 பேர் 2-ம் பரிசாக வெள்ளிப் பதக்கமும், 9 பேர் 3-ம் பரிசாக வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.

    சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேசன் ஆசான் சீனிவாசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது.

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    • சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கம் பெற்றனர்.
    • வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் கிராமத்தில், வீரத்தமிழன் சிலம்பாட்ட பள்ளி சார்பில் தன்னார்வ முறையில், குழந்தைகளுக்கு சிலம்பம் கற்பிக்கப்படுகிறது.இப்பயிற்சி பெற்று வரும் கிராம குழந்தைகள், கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சபரி, மான்ஷிதா, மகிஷா, வைஸ்ணவ் தங்கப்பதக்கமும், சுவாதி, ஸ்ரீஅகிலன், சர்வேஷ் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×