search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "restaurant"

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
    • பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

    துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    • மும்பையில் விராட் கோலி ஒன் 8 என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
    • மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர்.

    இந்திய கிரிக்கெட்டின் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருக்கு சொந்தமான உணவகத்தில் வேட்டி கட்டி சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர். இவர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ஒன் 8 என்ற உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.

    அந்த உணவகத்தில் வேட்டி சட்டை போட்டு செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது.
    • துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் ஆலங்காட்டில் மலிவு விலையில் உயர்தர உணவு வழங்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்த உணவகத்தை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த உணவகத்தில் காலை உணவாக ஒரு வடை ரூ.5, மூன்று இட்லி ரூ.15, பொங்கல், கிச்சடி தலா ரூ.20-க்கும், மதிய உணவாக முழு சாப்பாடு ரூ.30, குஸ்கா, தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம், பீட்ரூட் சாதம், மல்லி சாதம் ஆகியவை தலா ரூ.15-க்கும், தயிர் சாதம், வெஜ்பிரியாணி ஆகியவை தலா ரூ.20-க்கும், இரவு உணவாக 3 இட்லி ரூ.15-க்கும், இரண்டு சப்பாத்தி ரூ.15-க்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
    • பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ராயகடா, கோராபுட் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் முதல்கட்டமாக பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் பொது வகுப்புப் பெட்டிகளில் குறைந்த விலை உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளன.

    "பொது பெட்டிகள் ரெயிலின் இரு முனைகளிலும் அமைந்திருப்பதால், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.

    எனவே பயணிகளின் சிக்கனமான உணவு, தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் சேவையை எளிதாக்கும் வகையில் இந்த பெட்டிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் ஸ்டால்கள் அமைக்க சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்களை அமைப்பதில் போதுமான கவனம் செலுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
    • உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

    சென்னை:

    பயணவழி உணவகங்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என பயணிகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-

    திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உணவின் தரம், கழிப்பறை வசதி, பராமரிப்பு போன்றவை குறித்து அவ்வப்போது பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போக்குவரத் துக்கழக அலுவலர்கள் உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உணவக உரிமையாளர்களை அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதை மேம்படுத்தும் வகையில் உணவகங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க முன்பதிவு செய்யும் பயணிகளின் கைப்பேசிக்கு லிங்க் ஒன்று பயணத்தின் முன்பாக அனுப்பப்படும். இந்த இணைப்பில் பயணிகள் உணவகங்களில் உள்ள குறை, நிறைகளைப் பதிவிட்டு அனுப்ப வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரப்பெறுகின்றன. ஆனால் தெளிவாக இல்லை. வரும் காலங்களில் உணவகங்கள் எந்த முறையில் விதிமீறவில் ஈடுபடுகின்றன என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
    • வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மதுரை:

    மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.

    மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படுகிறது.
    • சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

    உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

    அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது.

    சம்பவ நாளில் உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட சோயா சாஸ் பாட்டில், தேநீர் கோப்பை, கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த சுஷியை நக்கினார். மேலும் இவை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் மந்தமானதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்வேயர் பெல்ட் மூலம் உணவு வழங்கி வரும் மற்ற உணவகங்கள், இது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தது. அதன்படி குரா சுஷி எனும் உணவகம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க செய்வதாக அறிவித்தது.

    மற்றொரு உணவகம் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படும் உணவு வகைகளை மூடி வைக்க திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. ஹமசுஷி உணவகத்தில் கன்வேயர் பெல்ட் முறையே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டது. 

    • உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    ×