என் மலர்
நீங்கள் தேடியது "repo interest"
- குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு.
- இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக உள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.
- வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
திருப்பூர் :
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதிக்கொள்கையை வெளியிட்டார்.இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 50 அடிப்படை புள்ளி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கி கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். தொடரும் வட்டி விகித உயர்வு மிகவும் கவலை அளிக்கிறது.திருப்பூர் நிறுவனங்கள் வங்கி கடன் பெற்றே பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. வட்டி விகிதம் உயர்வு, நிறுவனங்களுக்கு சுமையை மேலும் அதிகரிக்கும்.ஏற்றுமதி நிறுவனங்கள், டாலர் உள்ளிட்ட அன்னிய செலாவணி பணத்தில் கடன் பெற்று ஆடை தயாரித்தால் வட்டி விகித உயர்வு பாதிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.