search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashid Latif"

    • இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது.
    • உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    லாகூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிகளில் விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை போட்டி வருகிற 30-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 17-ந்தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் வீராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது.

    கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்.

    இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். அவர் 1996 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார். உலக கோப்பை போட்டி தொடங்க இன்னும் 46 தினங்கள் உள்ள நிலையில் 4-வது வீரர் வரிசையை இந்திய அணியால் இன்னும் அடையாளம் காண இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ரோகித்சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

    • டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்.
    • எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

    எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்விக்கு ​​பதிலத்த லத்தீஃப் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக்கை குறிப்பிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும். டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங் மற்றும் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்தும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டோனி ஒரு பெரிய பெயர். ஆனால் நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும். எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள். ஆனால் கைவிடப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன்-அவுட்களை யாரும் கவனிப்பதில்லை.

    கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர். அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறந்த பினிஷராக இல்லை. ஆனால் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவருக்கு முன் மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்கக்காரா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தனர்.

    இவ்வாறு லத்தீஃப் கூறினார்.

    • கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தோற்கடிப்போம்.
    • இந்திய அணிக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியில் உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும்.

    ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் பல்வேறு இருதரப்பு டி20 தொடர்களில் பங்கேற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த முறை விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.

    அதற்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மைதானத்தில் மோதிய போது பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்தது.

    வரலாற்றில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018-இல் இதே துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றது.

    அதனால் இந்த முறையும் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், அணிகள் நிகழும் தேவையற்ற வீரர்கள் மாற்றம் போன்ற குளறுபடிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லதீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியததாவது:-

    ரசித் லதீப்

    ரசித் லதீப்

    வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக தோன்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது இந்த வருடம் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் என்ற நிலைமை சீரற்ற சூழ்நிலையை காட்டுகிறது.

    இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ரோகித் சர்மா மற்றும் ராகுல் காயமடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்படுகிறார். அந்த வகையில் அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கே தடுமாறுகிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியான சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியவில்லை.

    அதனால் அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியில் உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும். கடந்த வருடம் இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்ததாலேயே பாகிஸ்தான் வென்றது. எனவே இம்முறையும் அதே தவறை செய்யும் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருப்பினும் முதல் தரமான வீரர்கள் இல்லாத நிலைமையிலேயே சமீபத்திய தொடர்களில் இந்தியா வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ×