search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha Elections"

    • பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்
    • இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருக்கும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை (25) கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால், பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் 6 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனிடையே, பாஜகவை ஆதரிப்பதாக கூறி, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோஷியார் சிங், ஆஷிஷ் ஷர்மா, கே.எல். தாக்கூர் ஆகிய மூவரும் ஷிம்லாவில் சட்டப்பேரவை செயலாளர் யஷ்பால் ஷர்மாவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

    இதனால் 9 சட்டப்பேரவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் தற்போது 68-ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜக, 25 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • வரும் 29-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    புதுடெல்லி:

    வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் தனது வாக்கைச் செலுத்தினார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடையும். வரும் 29-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் பா.ஜ.க. சார்பில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சஞ்சய் குமார் ஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி.
    • வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    மாநிலங்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. வருகிற 27-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. கட்சியில் இணைந்த ஆர்.பி.என். சிங் உத்திர பிரதேசத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் சுதன்ஷூ திரிவேதி, சௌத்ரி தேஜ்வீர் சிங், சாத்னா சிங், அமர்பால் மயூரா, சங்கீதா பால்வன்ட் மற்றும் நவீன் ஜெயின் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பீகாரில் ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில், பீகாரில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பா.ஜ.க. சார்பில் ராஜ தேவேந்திர பிரதாப் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அரியாணாவில் சுபாஷ் பராலாவும், கர்நாடகா மாநிலத்தில் நாராயண கிரிஷ்னாசா பாண்டகேவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகேந்திர பட், மேற்கு வங்காளத்தில் சமிக் பட்டாச்சாரியாவும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்.

    மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.

    இது குறித்த அறிவிப்பில், "வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்."


     

    "பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்."

    "வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்," இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


    • டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன்(ஜன.12) முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுகிறார்.
    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    காந்திநகர் :

    கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்களில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் ஒருவர். அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் சட்டசபையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுகல்ஜி தாகோர், தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

    எனவே, குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஜெய்சங்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார்.

    பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-

    மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.

    மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு அம்சத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு அண்டை நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நாம் அந்த சவாலை வலிமையாக எதிர்கொண்டுள்ளோம். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீதம் உள்ள 2 இடங்களுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

    இதுபோல், மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி உள்பட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    6 இடங்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.

    டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    ×