search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raju Srivastava"

    • இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா.
    • 40 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜூ இன்று காலமானார்.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர். அதன்பின்னர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீர் என அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். 

     

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

     

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    இந்நிலையில் 40 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலை 10.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவிற்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா.
    • ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இன்று சுய நினைவு திரும்பியுள்ளது.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் கடந்த 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீர் என அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

     

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    நடிகர் ராஜூவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் சுய நினைவுடன் உள்ளார் என கூறினார். எனினும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு அடுத்த நாள் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ளது. அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து கவனித்து வருகிறது என்றும் மற்றொரு தகவல் தெரிவித்தது.

     

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    ராஜூ ஸ்ரீவஸ்தவா

    இந்நிலையில், நடிகரின் தனி செயலாளர் கார்வித் நரங் இன்று கூறும்போது, ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு 15 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இன்று சுய நினைவு திரும்பியுள்ளது. அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

    ராஜூவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். ராஜூவின் சகோதரர் தீபு ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அவர் ஒரு போராளி. இந்த போரில் வெற்றி பெற்று விரைவில் திரும்புவார். அதன்பின் ஒவ்வொருவரையும் காமெடியால் மகிழ்விப்பார் என இதற்கு முன்பு வெளியான வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

    • ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    புதுடெல்லி:

    பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர்.

    இதற்கிடையே, ராஜூ ஸ்ரீவஸ்தவா (59), கடந்த 10-ம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில், ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராஜு ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், அவர் சில நபர்களைச் சந்திக்க டெல்லியில் தங்கியிருந்தார். அப்போது ஜிம்மிற்கு செல்லும்போது ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×