search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajkumar Sharma"

    • ரிஷப் பண்ட் -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை தான். இது துரதிஷ்டவசமானது.
    • பண்ட் மீது கேப்டனாக இருந்த விராட் கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என வெற்றி பெற்ற போதும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என தோல்வியை தழுவியது. இந்திய அணியின் மோசமான தோல்வியை கூட கண்டுக்கொள்ளாத ரசிகர்களுக்கு, ரிஷப் பண்ட் மீது அணி நிர்வாகம் காட்டும் பாரபட்சம் தான் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.

    டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலுமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். அதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் மோசமாக விளையாடினாலும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. வங்கதேச தொடரிலும் அவர் தான் விளையாடப்போகிறார். இதனால் அவரை நீக்க வேண்டும் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    இது குறித்து விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை தான். இது துரதிஷ்டவசமானது. இந்திய அணி நிர்வாகம் அவரை நீண்ட காலத்திற்கு உதவுவார் என நம்பியது. பண்ட் மீது கேப்டனாக இருந்த விராட் கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சொதப்பிய போதெல்லாம் தொடர்ச்சியாக வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இருந்தார். உள்நாட்டு தொடர்கள் டெஸ்ட் போட்டிகளில் முதலில் பண்ட் சொதப்பினார். எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அதன்பின்னர் சிறப்பாக ஆடினார்.

    அதே போல தான் தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் சொதப்புகிறார். உள்நாட்டு போட்டிகளுக்கு திரும்புவதில் எந்த இழிவும் இல்லை. ஃபார்மில் இல்லாத போது, உள்ளூர் போட்டிகளுக்கு சென்று தயாராகி வரலாம். அங்கிருந்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

    ×