search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RRvRCB"

    • ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.

    நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.

    • சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பட்லர் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • ஆர்சிபி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 125 ரன்கள் எடுத்தது.
    • விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.

    அதன்படி ஆர்சிபி அணியின் விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்சிபி அணிக்கு முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. விராட் கோலி அதிரடியாக விளையாட டு பிளிஸ்சிஸ் சற்று தடுமாறினார். ஆனால் இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

    இதனால் பவர்பிளேயில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆர்சிபி ரன் குவிப்பில் வேகம் குறைந்தது. 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சேர்த்தது.

    11-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி விராட் கோலி 39 பந்தில் அரைசதம் அடித்தார். மேலும் இந்த தொடரில் இது அவரின் 3-வது அரைசதம் ஆகும். 11.2 ஓவரில் ஆர்சிபி 100 ரன்னைத் தொட்டது.

    ஆர்சிபி அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருக்கும்போது 14-வது ஓவரின் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்தார். 33 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் க்ளீன் போல்டானார். ஆர்சிபி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

    ஒருபக்கம் விரைவாக ரன் வராத நிலையில் மறுபக்கம் விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 18-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு துரத்தி 97 ரன்களை தொட்டார். அதேவேளையில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

    19-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 67 பந்தில் சதம் அடித்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 72 பந்தில் 113 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆர்சிபி 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2024-ன் 19-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இது புது ஆடுகளம். வேகப்பந்து வீச்சுக்கு (சீம்) உதவியாக இருக்கும். ஆட்டத்தின் பின் பகுதியில் பனியின் தாக்கம் இருப்பதாக எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா தினேஷ் கார்த்திக், ஹசரங்கா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  

    ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார்.

    ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
    இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்களூரு அணி தோற்கடித்தது.
     
    இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்குகிறது.
    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 30 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், பேட்ஸ்மேன்களை கேப்டன் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். #IPL2018 #RRvRCB #Kohli
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியினரின் சிறப்பான பந்துவிச்சினால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

    தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு இந்த மாதிரி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது எங்களுக்கு புதுமையாகவே தெரிந்தது.


    டிவில்லியர்சின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. அவரைத் தவிர மற்றவர்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்த விதம் மோசமாக இருந்தது. இந்த தவறை 5-6 வீரர்கள் தொடர்ந்து செய்தனர். டிவில்லியர்ஸ் நன்றாக ஆடினாலும், அவருக்கு மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

    பேட்டிங்கில் மிடில்வரிசையை வலுப்படுத்த விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் நீடிக்கும் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’என்றார்.

    ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 160 ரன்களுக்கு மேல் எடுப்பது மிகவும் கடினமானது என்பதை அறிவோம். பெங்களூரு அணி சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றிருந்தாலும் எங்களது பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்து அபாரமாக பந்து வீசினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்றார். #IPL2018 #RRvRCB #ViratKohli #Kohli #Rahane
    ×