search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RAJAGOPURA URNS ARRIVED"

    • வருகிற 6-ந்தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ராஜகோபுர கலசங்கள் வந்தடைந்தது
    • செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் 4 அரை அடி உயரம் கொண்டது

    திருச்சி:

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 6-ந்தேதி ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்து திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கிடையே 7 நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ராஜகோபுரத்துக்கு நேர்த்திக்கடனாக 7 கோபுர கலசங்கள் வழங்கும் பணி பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையார் மாரியம்மன் கோவிலில் நடந்தது.

    இந்த கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த அண்ணன் தம்பியான பொன்னர், சங்கர் ஆகியோர் வழங்கி உள்ளனர். செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் 4 அரை அடி உயரம் கொண்டது.

    இந்த கலசங்கள் அனைத்திற்கும் நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆராதனை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்படடு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    வழியெங்கும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கலசங்களை பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். முன்னதாக கலசங்கள் எடுத்து செல்லும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திற்கு மலர்தூவி சிறப்பு பூைஜகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து இந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர் மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது.

    ×