search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "question paper"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் குளறுபடி
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த சேர்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.

    நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் பல்கலைக்கழகப் பருவத் தேர்வின் போது முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத் தேர்வில் சிக்கலான பகுப்பாய்வு, கட்டமைப்பியல், வேறு பட்ட வடிவவியல் ஆகிய பாடங்களுக்கு 2021-ம் ஆண்டு வெளியான வினாத்தாள்கள் அப்படியே 2023 என ஆண்டை மட்டும் மாற்றி மறுபதிப்பு செய்து அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடை பெற்று வரும் பருவத் தேர்வில் முதுநிலை கணிதவியல் 2-ம் ஆண்டில் ரியல் அனலைசிஸ் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாளை அப்படியே மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து வினாத்தாள் குளறுபடி விவகாரம் வெளியாகி வருவதை யடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

    6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

    அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

    ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    • அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத்தே ர்வுகள் அனைத்துக்கும் கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

    இதற்காக அரசு அச்சகத்தில் கேள்வி தாள்கள் அச்சடிக்க ப்பட்டு பின்னர் அவை மாவட்ட வாரியாக பிரிக்க ப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

    கேள்வி தாள்கள் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு தேர்வுக்கு முதல் நாள் அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு அனுப்பும்போது கேள்வி த்தாள்கள் முன்கூட்டியே வெளியே கசிந்து பரபர ப்பை ஏற்படுத்தின. இதனை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொ ண்டுள்ளது.

    அதன்படி இனி அச்சகத்தில் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படாமல் நேரடியாக அந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்து கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் பிரிண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரிண்டர் வழங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் தேர்வன்று அந்தந்த தலைமை ஆசிரி யர்களின் இ-மெயிலுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் கேள்வித்தாள் அடங்கிய பி.டி.எப் பைல் அனுப்பி வைக்கப்படும்.

    தலைமையாசிரியர் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கேள்வித்தாள்களை பிரிண்டர் மூலம் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

    இதன் மூலம் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியே கசிவதை தடுக்க முடியும்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது:

    கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டரை கையாள்வது குறித்து ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    தேர்வன்று அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.
    • 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது.

    அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

    இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • நிறம் மாற்றம் காரணமாக மாணவர்களின் தேர்வு திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினர்.
    • கேள்வித்தாள் நிறம் மாறியிருப்பதால் என்ன பிரச்சினை? என்று கேட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் முழுவதும் மேல்நிலை பள்ளி தேர்வுகள் நேற்று தொடங்கின.

    முதல் நாள் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருந்தது.

    வழக்கமாக கறுப்பு நிறத்தில் அச்சிடப்படும் கேள்வித்தாள்கள் இம்முறை சிவப்பு நிறத்தில் அச்சிட்டது மாணவர்களுக்கு வித்தியாச உணர்வை கொடுத்தது.

    தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் சிலர் இதுபற்றி பெற்றோரிடம் கூறினர். அவர்கள் கேள்வித்தாள் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபோல எதிர்க்கட்சி ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த நிறம் மாற்றம் காரணமாக மாணவர்களின் தேர்வு திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டினர். இதற்கிடையே இச்சம்பவத்தை கண்டித்து பெற்றோர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கேள்வித்தாள் நிறம் மாற்ற விவகாரம் தொடர்பாக கல்வி மந்திரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கேள்வித்தாள் நிறம் மாறியிருப்பதால் என்ன பிரச்சினை? என்று கேட்டார்.

    மேலும் மேல்நிலை தேர்வு கேள்வி தாளையும், உயர்நிலை வகுப்புக்கான தேர்வுத்தாளையும் வேறுபடுத்தி காட்டுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    • மேற்கு வங்காளத்தில் மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது.
    • அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு இவ்வாறு குறிப்பிடுகிறது. இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கேள்விக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது தவறுதலாக ஏற்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விளக்க அறிக்கையுடன், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி மேற்கு வங்காள கல்வித்துறையை கேட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
    • நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.

    இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.

    தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.எனவே மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ம் வகுப்புகளுக்கான ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 16 என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிக்கான அரசு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 மையங்களில் 1,776 பேர் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 400 பேரில் 263 பேர் தேர்வு எழுதினர். அறை எண் 14-ல் தேர்வு எழுதிய 6 பெண் பட்டதாரிகள் உள்பட 16 மின்னணு மற்றும் தொடர்பு என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு தவறுதலாக மின் பொறியியல் தொடர்பான வினாத்தாள் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் குழப்பம் அடைந்த அவர்கள் இதுகுறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். ஆனால் முறையான வினாத்தாள்தான் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறி 16 பேரையும் தேர்வெழுத அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    தேர்வு முடிந்து வெளியேறிய அவர்களுக்கு அதே மையத்தின் மற்ற அறைகளில் சரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்தியிருப்பது, தெரிய வந்தது. அப்போதுதான் வினாத்தாள் தவறுதலாக கொடுக்கப்பட்டதும் உறுதியானது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் வேறு வினாத்தாளுக்கு தேர்வு எழுதிய 16 என்ஜினீயரிங் பட்டதாரிகளும் தேர்வு மைய பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாசில்தார் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் வினாத்தாள் மாறியது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பொன்னையா அவர்களிடம் உறுதி அளித்தார். 
    ×